என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
    • சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து தரப்பட்டது.

    உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்கச் செய்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சிறிய தொட்டிகளில் வழக்கமான தண்ணீருடன் கலக்கப்பட்டு கைதிகள் புனித நீராடி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  கைதிகள் அவற்றில் புனித நீராடினர்.

    இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது:

    சங்கம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனித பூமியில், உத்தரப் பிரதேசம் வரலாற்றைப் படைத்துள்ளது. 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களைப் பெற்றுள்ளனர்.

    அதே பாதையைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், அங்கிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்ட கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

    ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மகா கும்பமேளாவில் புனித நீராடி வழிபட்டார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், " பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில்!

    உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவின் ஒரு பகுதியாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்றார்.

    • தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
    • பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.

    கடந்த சில நாட்களாக அப்பா என்ற சொல் வைரலாகி வருகிறது. தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை பார்த்து காப்பி அடிப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து அப்பா என்று அழையுங்கள் என கூறிவருகிறார் எனவும் பிரதமர் மருந்தகங்களை பார்த்து முதலமைச்சர் மருந்தகங்கள் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் காப்பி அடிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    அப்பா என்ற அழையுங்கள்... அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர்

    முதலமைச்சர் மருந்தகங்கள்...

    பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. ...ஸ்டிக்கர்

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

    என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் ...

    #ஸ்டிக்கர் ஸ்டாலின்

    என கூறினார்.

    • நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
    • யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி காலியில் அனுப்பி வைத்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இளம்பெண் ஒருவர் கோரமங்களா பகுதியில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவர் பெங்களூருவில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) கோரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே அந்த பெண் நின்றுகொண்டிருந்தபோது ஏற்க்கனவே அறிமுகமான ஒரு இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் அந்த பெண்ணை அணுகினார். அவருடன் நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

    டின்னருக்கு பிறகு அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை ஓட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபின் விஷயம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போலீஸ், குற்றாவளிகளின் மூன்று பேரை கைது செய்தது.

    அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவித்தனர். நான்காவது குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
    • இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

    கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.

    இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.

    இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது. டிரெய்லரை மலையாள பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பேசில் ஜோசஃப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பமேளாவில் இன்று புனித நீராடி வழிபட்டார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.

    இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது.

    சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    தெலுங்கானாவில் மகளின் திருமணம் முடிந்ததும் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தின் பிகானர் பகுதியில் உள்ள ராமேஷ்வர்பள்ளி கிராமத்தில் வசித்தவர் பாலசந்திரம்(56). இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    நேற்று திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக, கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் அவர் திடீரென மாரடைப்பால் சரிந்தார்.

    திருமண மண்டபத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உடனடியாக பாலசந்திரத்தை கம்மாரெட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் அங்கு சென்றடைந்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த துயர சம்பவம் உறவினர்களையும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.  

    • இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது
    • இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
    • தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.

    மேலும் அவர், "ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசியவர், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்.

    ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும்.

    எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என்றார்.

    • திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது.
    • சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர். வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் குளிக்காமல் வந்து விட்டதாக மகா கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-


    மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது. திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.

    அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக சமீபத்தில் இந்தியாவில் ஆட்கள் சேர்ப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.

    அதில் வணிக செயல்பாட்டு ஆய்வாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளிட்ட 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி இருக்கிறது.

    இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்த போதிலும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது நிறுவன கார் தொழிற்சாலையை கொண்டு வருவதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார்.

    இந்த கார் தொழிற்சாலை மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் டெஸ்லா கார் தொழிற்சாலையை எப்படியும் தனது மாநிலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சத்தம் இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மந்திரி நாரா லோகேஷ் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது அவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனஜோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் ஆந்திரா அரசு செய்து தரும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.

    இதையடுத்து ஆந்திர அரசு மீண்டும் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் வகையில் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் நில வசதி கொடுக்க அம்மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் மின்சார வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தென் மாநிலமான ஆந்திராவில் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான முயற்சியை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார்.

    முதலில் கார் இறக்குமதியை அதிகரித்து படிப்படியாக கார் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தவும் டெஸ்லா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ×