DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்
Published on

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com