என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
- கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
- ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அவரு டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் காலை உணவை சாப்பிட்டனர்.
அங்கு நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காலையிலே இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட உடனே இந்த குழந்தைகள் மாதிரி எனக்கும் 'எனர்ஜி' வந்திருச்சு.
எப்படி இன்றைக்கு முழுக்க நீங்கள் ஆக்டிவ் ஆக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவ் ஆன டே தான். ஆக்டிவ் ஆன டே மட்டுமல்ல மனசுக்கு ரொம்ப நிறைவான நாள்.
இந்த திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதை விட மனநிறைவு என்ன இருக்க முடியும். அடுத்து இது மகிழ்ச்சிக்கு உரிய நாளும் கூட. ஏனென்றால் மதிப்புமிகு பஞ்சாப் முதல்-மந்திரி எனது நண்பர் பகவந்த் மான் இங்கு வந்துள்ளார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன்.
இதற்கு முன்பு இப்போது நாடே திரும்பி பார்க்கிற புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.
இப்போது இந்த திட்டத்துக்கு பகவந்த்மான் வந்திருக்கிறார். தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்க கூடிய பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மனமார்ந்த நன்றி.
பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது. வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது.
கல்வி அறிவை வழங்கும் இடமாக மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது. வயிற்றுப் பசியையும் போக்கணும். நீதிக்கட்சி காலத்தில் நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, அப்போது சென்னை மாநகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெருந்தலை வர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம்.
இந்த திட்டத்தை தொடங்க காரணம் என்ன என்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாளில் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு போனபோது, அங்கிருந்த மாணவிகளிடம் காலையிலே என்ன சாப்பிட்டீர்கள் என்று சாதாரணமாக கேட்டேன்.
ஆனால் நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள் டீ மட்டும் குடித்து விட்டு வந்துட்டேன். 'பன்' சாப்பிட்டேன் இந்த மாதிரி சொன்னாங்க. இதை மனதில் வைத்துதான் காலை உணவு திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாக அறிவித்தேன்.
2022-ம் ஆண்டு செப் டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்தார்கள்.
பிறகு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த திருக்கு வளையில் எல்லா அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தார்கள்.
இந்த திட்டத்தோட அட்டகாசமான சக்சஸ் பற்றி கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டை பார்த்து இனி நகர் பகுதிகளில் செயல்படுகிற 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம்.
இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற போகிறார்கள். இனி தமிழ்நாட்டில் செயல்படுகிற 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கக் கூடிய 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினமும் காலையில் சூடாக சுவையாக, சத்தாக சாப்பிட்டு பள்ளி வகுப்பறையில் தெம்பாக நுழையப் போகிறார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதை செலவு என்று சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் (முதலீடு) இது.
எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ் சமுதாயத்துக்கு தரப் போகிற முதலீடு இது.
என் தமிழ்நாட்டு மாணவ செல்வங்களை நம்பி அவர்களின் திறமை மீது, அறிவு மீது, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம்.
நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தோட உண்மையான வெற்றி.
இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள், பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.
காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசா…மானிட்டர் செய்து கொண்டு வருகி றேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்தத் திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது. இதனால்,
* உணவுண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ் மெண்ட் வந்திருக்கிறது.
* பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள்.
* குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
* ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.
* கிளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது.
* வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.
அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது.
கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.
ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை! இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன்…
அது, "ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்! இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.
அதேபோல, இரண்டாம் கட்டத்தில், ஆறு மாதம் வரையிலான 76 ஆயிரத்து 705 குழந்தைகளில், 67 ஆயிரத்து 913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.
இந்தத் திட்டங்கள் மட்டும் கிடையாது, நம்முடைய அரசின் முத்திரை திட்டங்களில் முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம் பேர்!
பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்!
வேலைக்குச் செல்கின்ற மகளிருக்கு தோழி விடுதிகள்!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று, நேரில் ரேஷன் தருகின்ற தாயுமானவர் திட்டம்!
ஏழை, எளிய நடுத்தர மக்கள் இருக்கின்ற இடத்திற்கே சென்று பயனளிக்கின்ற உங்களுடன் ஸ்டாலின்! நலம் காக்கும் ஸ்டாலின்!
இது எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, நாட்டிலேயே பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி அடைந்திருக்கின்ற மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாடு தான்!
நான் சி.எம். ஆன நாளில் இருந்து எனக்கு இருந்த, இருக்கின்ற ஒரே குறிக்கோள், "தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும்!" இந்த நேரத்தில் நான் பெரிதாக நன்றி சொல்லிக் கொள்ள விரும்புவது… இந்த குழந்தைகளுக்கு சமைக்கின்ற தாய்மார்களுக்குதான்! உங்கள் வீட்டில், உங்கள் குழந்தைகளுக்கு சமைக்கின்றது போல, நன்றாக சமைக்கிறீர்கள்! மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகளுக்கு நான் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். உங்கள் பணியும் சிறப்பாக தொடரவேண்டும்!
மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… நன்றாக விளையாடுங்கள்… உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்!
முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம்! எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே! எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! இருப்போம்! குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்!நன்றி! வணக்கம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.
- முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.
சென்னை:
இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முதற்கட்டப் பயணத்தை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கந்தக்கோட்டத்தில் நடந்த விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மிகப் பஸ்சை தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதலமைச்சரையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார்.
கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வாசன் முதலமைச்சர் சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஏற்கனவே திட்டமிட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய இயலாத சூழ்நிலை இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே தி.மு.க. கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்செந்தூர் அர்ச்சகர்களிடம் ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி தீர்ப்பினை பெற்று வருகின்றோம். வெகு விரைவில் ஒழுங்குப்படுத்தி எவ்வித கையூட்டும் இல்லாமல் தரிசனம் செய்கின்ற சூழ்நிலையை நிச்சயம் துறை மேற்கொள்ளும். நடவடிக்கை எடுக்கும்.
ஸ்ரீரங்கம் கோவிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சரின் அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன்.
விஜய் 2 மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், ராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனது கருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, கோ.செ.மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் ரேணுகா தேவி, முல்லை, உதவி ஆணை யர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார்.
- இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மோகன் ஜி அடுத்து இயக்கும் திரௌபதி 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.
இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
- இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரா ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலை 8 முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் காலை 8 மணி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
- அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்காலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
- சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார்.
- குஷ்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
மத்தியப் பிரதேசத்தின் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான நாளிலிருந்தே கணவர் என்னை துன்புறுத்தத் தொடங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டினார்.
சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார்.
"எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை" என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.
தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் குஷ்பு எப்படியோ அங்கிருந்து தப்பித்து, வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
வரதட்சணை கேட்டும் தனது மகளை பிடிக்கவில்லை என்றும் மருமகன் துன்புறுத்தியுள்ளான். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குஷ்புவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.
- 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.
சென்னை தி.நகரில் தி.மு.க. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விடியல் எங்கே? என்ற பெயரில் புத்தகத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க.வின் பொய்யை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
* 3 தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர்.
* வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.
* 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.
* 66 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. முழுமையாக நிறைவேற்றி உள்ளது.
* 87 விழுக்காடு வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை
* தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக 12 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க. அதில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
* ஈழ தமிழர் விவகாரத்தில் 4 வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
* லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று.
* முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் என வாக்குறுதி அளித்தது. சிறப்பு நீதிமன்றங்கள் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
* தி.மு.க. தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்.
- நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அபராதமாக விதித்த 25 சதவீத வரி நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.
நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு, விசித்திரமான இந்திய வெளியுறவு கொள்கையின் விளைவு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
வரிவிதிப்பு மற்றும் இந்திய பொருட்களை வாங்குவது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "நாம் கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை நாம் அனைவரும் இப்போது பார்த்து வருகிறோம்.
இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுக்கள் மட்டும் போதாது.
நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை (MSME) முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.
அப்படி இருக்கும்போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும்" என்று வினவியுள்ளார்.
- தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
- பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ. பி.எல்.லை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக உள்ளார்.






