என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    87% வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை - விடியல் எங்கே? புத்தகத்தை வெளியிட்ட அன்புமணி
    X

    87% வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை - விடியல் எங்கே? புத்தகத்தை வெளியிட்ட அன்புமணி

    • வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.
    • 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.

    சென்னை தி.நகரில் தி.மு.க. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விடியல் எங்கே? என்ற பெயரில் புத்தகத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வின் பொய்யை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.

    * 3 தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர்.

    * வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.

    * 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.

    * 66 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. முழுமையாக நிறைவேற்றி உள்ளது.

    * 87 விழுக்காடு வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை

    * தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக 12 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க. அதில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    * ஈழ தமிழர் விவகாரத்தில் 4 வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    * லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று.

    * முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் என வாக்குறுதி அளித்தது. சிறப்பு நீதிமன்றங்கள் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    * தி.மு.க. தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×