என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுங்கம்பாக்கம்"

    • கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
    • கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார்.
    • வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது.

    பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.

    வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை சுருட்டி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை போன இடத்தில் பதிவாகி உள்ள கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில்வே அதிகாரி வீட்டுக்கு சமீபத்தில் யார்-யார் வந்து சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
    • மூன்றே நாளில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள்.

    இது பல்வேறு இடங்க ளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

     இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×