என் மலர்
நீங்கள் தேடியது "nungambakkam"
- கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
- கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார்.
- வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது.
பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.
வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை சுருட்டி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை போன இடத்தில் பதிவாகி உள்ள கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில்வே அதிகாரி வீட்டுக்கு சமீபத்தில் யார்-யார் வந்து சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சையது அலி. கொத்தனார். இவர் நுங்கம்பாக்கத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர் சம்பள பணம் ரூ. 31 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் அவரை தாக்கி சையது அலியிடம் இருந்த ரூ. 31 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதியில் திருநங்கைகளுடன் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் கூடுவது வழக்கம்.
போதையில் மிதக்கும் இளைஞர்கள் பலர் நள்ளிரவு நேரத்தில் உற்சாக மிகுதியில் சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதிக்கு செல்வதுண்டு. அங்கு எப்போதும் சாலையில் திருநங்கைகள் அணி வகுத்து நிற்பார்கள். அவர்கள் காரில் வரும் வாலிபர்களிடம் சென்று அருகில் உள்ள இருட்டான பகுதிக்கு செல்லலாம் என்று கூறுவார்கள். இதில் மயங்கும் இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் வாங்கிக் கொள்வார்கள்.
இது தொடர்பாக திருநங்கைகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த குமார், கோயம்பேட்டை சேர்ந்த வருண்குமார், பாலா, ஆறுமுகம், ஆவடி சிவகுமார், சபரிநாதன், கொடுங்கையூர் ராஜேஷ்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் மேலும் 18 பேர் சிக்கினர். இவர்கள் 25 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இரவு நேரங்களில், இளைஞர்கள் யாரும், நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிக்கு திருநங்கைகளை தேடி வரவேண்டாம் என்றும் இதை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கைதான இளைஞர்கள் அனைவரும் 20 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
திருநங்கைகளின் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்து வேல்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.








