என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.

    இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.  

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.

    காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.

    இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் இந்திய போர் விமானம் ஊடுருவி, முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்பட 3 முக்கிய கட்டமைப்புகள் மீது குண்டுகளை வீசியது. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.

    இந்தநிலையில் சேதம் அடைந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் கட்டும் பணியை பயங்கரவாதிகள் தொடங்கி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சேதம் அடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் அங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை முடித்து புனரமைக்கப்பட்ட வளாகத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    மேலும், இந்த கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.

    • 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
    • ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.

    பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் உறுதி பூண்டு உள்ளது.

    அசாமின் 13 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி பாரதம் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

    காங்கிரஸ் அசாமை பல தசாப்தங்களாக ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்திரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 6 பாலங்களைக் கட்டினோம்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நமது ராணுவம் மிக பலத்துடன் எதிர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ் நமது ஆயுதப்படைகளை அவமதித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப் பாட்டில் காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது.

    இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊடுருவல்காரர்கள் உங்கள் நிலத்தை அபகரிக்க பாஜக அனுமதிக்காது. மக்கள் தொகையை மாற்றும் சதியை தடுப்போம்" என்று மோடி பேசினார்.

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைத்தார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.  

    • சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிட மாடல்!
    • 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிட மாடல்!

    இன்று கிருஷ்ணகிரியில் -

    * ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,

    * 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

    * 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

    அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா - பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா - தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்! என்று கூறியுள்ளார். 

    • பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் பேசக்கூடிய ஒரு அமைச்சராக ஜி.எஸ்.டி. வரி பற்றி மக்களுக்கு விளக்கும் பணியை எனக்கு வழங்கி என்னை பிரதமர் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார்.

    அப்போது மேடையில் நான் பேசியபோது விக்கிரம ராஜா இருந்தார். இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும், மக்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்று அப்போது விக்கிரமராஜா எடுத்து சொன்னார்.

    அவர் எடுத்து சொன்னதால் திரும்பவும் நான் சென்று அறிக்கை கொடுத்து என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலமாக முன்னேற்றம் ஏற்படுத்திக் கொண்டே வந்தோம். அதற்காக விக்கிரமராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    5, 12, 18, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. இப்போது 5, 18 என்கிற 2 வகைகளுக்கு வந்துவிட்டது. காலையில் எழுந்ததும் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்து இரவு தூங்குவதற்கு முன்பு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வரை ஏழை, நடுத்தர வர்க்கம், பணம் இருக்கின்றவர்கள் எல்லோரும் பயன்படுத்தக் கூடிய எந்த வகையான பொருளாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. தாக்கம் இருக்கும்.

    அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது 28 சதவீதமாக இருக்குமா? 18 சதவீதமாக இருக்குமா? என்கிற காலம் போய் இன்றைக்கு 5 அல்லது 18 சதவீதத்துக்குள் எல்லாப் பொருட்களும் வந்து விடுகிறது என்பதுதான் முக்கியமான அம்சம்.

    12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவீதத்துக்கு வந்துள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த சில பொருட்களுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    அதே போல் ஏற்கனவே 18 சதவீதத்தில் இருந்த 90-க்கும் மேற்பட்ட பொருட்கள் 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சில பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு வந்துள்ளதால் எவ்வளவு விலையை குறைத்துள்ளோம் என்பதை பாருங்கள்.

    12-ல்இருந்து 5 சதவீதத்துக்கு வந்ததே குறைவுதான். அதிலும் 18-ல் இருந்து 5 சதவீதத்துக்கு வந்தது எப்பேர்பட்ட குறைச்சல் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.

    எப்போதும் நமது மீது அரசு வரி விதிக்கிறது, பளுவை ஏற்றுகிறது என்ற நிலை போய் இன்று பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத் துள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து சில பொருட்கள் வரி நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் 140 கோடி மக்களுக்கு பலவிதமான பொருட்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம், அரை சதவீதம் அல்ல, கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை குறைத்து உள்ளோம்.

    பல பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனுடைய தாக்கம் 140 கோடி மக்கள் மீதும் இருக்கும். இது நல்ல தாக்கம்தான். விலை குறைகிறது. விலை குறைந்தால் வீட்டில் நமக்கு செலவு மிச்சமாகும். அதை நீங்கள் எந்த வகையிலாவது உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதோ, பெரிய வர்களுக்கு செலவு செய் வதோ அல்லது சேமிப்பாக வைப்பதோ உங்கள் கையில் இருக்கிறது.

    பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து இதை தீபாவளிக்கு முன்பு குறைத்து விடுங்கள் என்றார். தீபாவளிக்கு முன்பு கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கும்போது தென்னிந்தியாவில் நாம் அனைவருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் துணி எடுப்பது, பலவிதமான பொருட்கள் வாங்குவது போன்ற பழக்கம் இருக்கிறது.

    வடஇந்தியாவிலும் செய்வார்கள். ஆனால் வடக்கோ, குஜராத்தோ, மராட்டியமோ அல்லது துர்கா பூஜை நேரத்தில் மேற்கு வங்காளத்திலோ கூட நீங்கள் யோசித்து பார்த்தால் தீபாவளிக்கு முன்பே நவராத்திரி கால கட்டத்தில் வீட்டுக்கு நிறைய சாமான்கள் வாங்குவதோ அல்லது பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்குவதையோ செய்வார்கள்.

    தீபாவளியை மனதில் வைத்து பிரதமர் சொன்னார் என்றால் கூட எல்லா மாநிலத்தினரும் அமர்ந்தி ருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அவரவர்களுக்கு அவரவர்களின் பண்டிகையை மனதில் வைத்து நவராத்திரிக்கு முன்பே செய்து விட வேண்டும் என்பதால் முன்கூட்டியே செய்துவிட்டோம்.

    நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. அவர்கள் பல முறை கோரிக்கை வைத்தால் கூட இன்றைக்கு ஒரேயடியாக எல்லா கட்டமைப்புகளையும் மாற்றி விட்டு தொழில் செய்பவர்களுக் கும், வணிகத்தில் இருப்பவர் களுக்கும் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எளிமைப்படுத்தி வரியையும் குறைத்து உள்ளோம். இதனால் எல்லா மக்களுக்கும் பயன் இருக்கி றது.

    12 சதவீதத்தில் இதுவரை இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ளது. 1 சதவீதம் மட்டுமே 18 சதவீதத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

    ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத் தப்பட்டபோது 65 லட்சம் பேர்தான் வரி கட்டினார்கள். அதில் தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் அடங்குவர். ஆனால் இன்று ஜி.எஸ்.டி. வரியை 8 வருடத்தில் 1½ கோடி பேர் கட்டுகி றார்கள்.

    ஜி.எஸ்.டி. ஒரு பெரிய கப்பர்சிங் வரி என்று எதிர்க்கட்சி தலைவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அது கப்பர் சிங் வரியாக இருந்திருந்தால் தொழிலோ, வர்த்த கமோ 65 லட்சத்தில் இருந்த வர்கள் ஏன் 1½ கோடி பேர் ஜி.எஸ்.டி.யில் சேர்ந்தார்கள். அது சுலபமாக இருக்கிறது.

    எங்கு பொருள் வாங்கினாலும் அதே விலையில் கிடைக்கிறது. பொருள் வாங்கி அதை இன்னும் முன்னேற்றம் அடைய செய்து ஏற்றுமதிக்கு கூட பயன்படுத்துகிறீர்கள். அதனால் நுகர்வோர் மட்டும் வரி கட்டவில்லை. பொருள் தயாரிப்பவர்களும் வரி கட்டுகிறார்கள்.

    ஜி.எஸ்.டி.யில் வருவதால் நமக்கு ஆதாயம் இருக்கிறது என்று சொல்லி வந்ததால் 65 லட்சத்தில் இருந்து 1½ கோடியாக கூடி இருக்கிறது.

    2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி ரூ.7.9 லட்சம் கோடி யாக வசூலானது. அது இன்று ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் ரூ.1.9 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளுக்கு 50 சதவீதமாக பிரித்துக் கொள்கிறோம்.

    ரூ.1.8 லட்சம் கோடி வருமானம் வந்தால் அது ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கும், ரூ.90 ஆயிரம் கோடி மாநில அரசுக்கும் செல்கிறது. அதன் பிறகு ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவதில் கூட கிட்டத்தட்ட 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகி றது. அதனால் 100-ல் 23 சதவீதம்தான் மத்திய அர சுக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மக்களுக் கும் பலன் கிடைத்துள்ளது. மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன் னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதா ராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார் கள். அதை நாங்கள் பொறு மையாக காதில் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை.

    ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்தி ருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்ப தையும் எடுத்து சொன்னேன்.

    அந்த நல்லதுக்கு பிரதமர் மோடி, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்ல வில்லை. சொல்லாமல் போனால் கூடஎனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.

    சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர் கள் வந்து அமர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள்.

    இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர் கள்தான் இருக்கிறார்கள். இந்த முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்த அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் எடுத்தார்கள்.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால் கெட்ட பெயர் வரும் போதோ, திட்டும் போதோ பிரதமர் மற்றும் என்னை சொல்லிக் கொண் டிருந்தவர்கள் இன்றைக்கு நல்ல இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறோம். அதிலும் மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது என்பதை நானே எடுத்து சொல்ல விரும்புகிறேன்.

    அதைத்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் நான் சொன்னேன். பத்திரி கையாளர்கள் சந்திப்பிலும் சொன்னேன். மாநிலங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய எல்லா நிதி அமைச்சர்க ளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் ஒத்துழைத்து இந்த முடிவை எடுத்தார்கள்.

    மக்கள் நலன் கோரி வரி விகிதத்தை குறைக்கும் போது அந்த நன்மை மக்க ளுக்கு போய் சேர விடாமல் தடுப்பதற்கு யாருக்கு மனதில் தைரியம் இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இதைப்பற்றி சர்ச்சை ஏற் பட்டதா? என்று பத்திரிகை யாளர்கள் என்னிடம் கேட்டனர்.

    350-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விலையை குறைத்து உள்ளோம். விலை என்றால் அதற்கான வரியை குறைத்திருக்கிறோம். 5, 18 சதவீதம் என 2 அடுக்காக குறைத்துள்ளோம். இது தவிர தொழில் செய்பவர்கள் 3 நாளில் பதிவு செய்யும் வகையில் கட்டமைப்பை சரி செய்துள்ளோம்.

    சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு ஏற்கனவே வரி கிடையாது. ஆனால் தொழிற்சாலையில் தயாரித்த பாப்கார்னை உப்பு போட்டும், சாக்லேட் போட்டும் விற்றனர். அதில் உப்பு போட்ட பாப்கார்னுக்கு 5 சதவீதமும், சாக்லேட் போட்ட பாப்கானுக்கு 18 சதவீதம் எனவும் வகைப் பாடு இருந்தது.

    இதுபற்றி ஒரு பாப்கான் விலையை நிதி மந்திரி இப்படி விளக்கி கூறுகி றாரேஎன்று விமர்சித்தனர். கிண்டல் செய்தனர். அதற் குரிய பதிலை சொல்வது எனக்கு இருந்தது. பாப்கார்னுக்கு 2 விலையா? என்று கேட்டனர். இப்போது உணவு பொருட் கள் எல்லாமே 5 சதவீதத் துக்கு வந்து விட்டது அல்லது ஜீரோவுக்கு போய் விட்டது. இப்போது வகைப்பாடு பிரச்சினையே இல்லை.

    ஜி.எஸ்.டி. வரி குறைப் பால் பொருட்களின் விலை குறையப் போகிறது. நாட் டில் ஒரு பெரிய விதமான மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலமாக வந்து உள்ளது.

    இந்த சீர்திருத்தத்தை செய்வதற்கு 5 விதமான செயல்களை மனதில் வைத்து இதை அமல்படுத்தி னோம். தினசரி பயன்படுத் தும் பொருட்களில் மாறுதல் வருமா? ஏழைகள், நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத் தும் பொருட்களை இதில் கொண்டு வருகிறோமா? விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா? சிறு-குறு தொழில் செய்பவர்கள் வாங்கும் பொருட்கள் இன்னும் குறைந்த விலை யில் கிடைக்குமா? நமது நாட்டு பொருளாதாரம் விரைவில் வளருமா? என் பதை வைத்துதான் இதை செய்தோம்.

    ஒவ்வொரு பெரிய கம்பெனிகளும் விலை குறைப்பை பொதுமக்க ளுக்கு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். எல்லா நிறுவனங்களும் பொருட் களை விலை குறைத்து மக்களுக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பிரதமர் மோடி மக்கள் நலன்கோரி இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தத்தின் ஆதா யம் மக்களுக்கு போய் சேர முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

    இந்த வரி சீர்த்திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும், எந்தெந்த பகுதிகள் பயன் அடையும் என்பதையும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

    திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் உற்பத்தி யாகும் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், கைவி னைப் பொருட்கள். காஞ்சீபுரம் பட்டு மற்றும் ஜரிகை வேலைப்பாடு, பொள்ளாச்சி காங்கேயம், கடலூர் பகுதிகளில் உற் பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள்.

    சிவகாசி, சென்னை பகுதிகளில் உற்பத்தியாகும் காகித தொழில்கள், தஞ்சா வூர் பாரம்பரிய பொம்மை கள், கும்பகோணம் உலோ கப் பொருட்கள். ஸ்ரீபெரும்பு தூர், ஓசூர், கோவை பகுதிகளில் உற்பத்தியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உள்பட தமிழ்நாட்டில் ஏராளமான பொருட்களின் விலை குறையும். இதன் மூலம் சமூக பொருளாதார அம்சங்கள் வலுப்பெறும்.

    நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் நயி னார் நாகேந்திரன் சென்னை ஐ.ஐ.டி. இயக்கு னர் காமகோடி, சி.ஐ.ஐ. சேர்மன் உன்னிகிருஷ்ணன், ஏ.இ.பி.சி. துணைத் தலைவர் சக்திவேல், எப்.ஐ.சி.சி.ஐ. சேர்மன், வேலூர் எச்.சி.சி.ஐ. தலைவர் லினேஷ் சனத்குமார், சைமா தலை வர் துரை பழனிசாமி , சென்னை குடிமக்கள் மன்ற தலைவர் கே.டி.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை குடிமக்கள் மன்ற செயலாளர் காயத்ரி, சுரேஷ் நன்றி கூறினார்.

    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    பாரத ரத்னா விருது பெற்ற இந்த நாட்டின் மகத்தான புதல்வரும், அசாமின் பெருமையுமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு மோடி பாரத ரத்னாவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.

    காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். நீங்கள் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் தாங்கி கொள்வேன்.

    நான் சிவ பெருமானின் பக்தன். நான் அவதூறுகளின் விஷத்தையும் அருந்தி அதை அகற்றி விடுவேன். ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா, தவறா என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள்" என்று பேசினார்.  

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்கிறார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். 

    • பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்
    • இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.

    திருச்சி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரத யாத்திரை புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு அவர் நேற்று 2 நாள் சுற்று பயணமாக வந்தார். திருச்சியில் பூத் முகவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் மாலையில் முசிறி தா.பேட்டையில் கேப்டன் ரத யாத்திரையில் கலந்து கொண்டார்.

    இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் 21-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலை முள்ளிப்பாடியில் அமைக்கப்பட்டிருந்த 73 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். இதில் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் எங்களின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கேள்விக்கு பதில் அறிவிப்போம். பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.

    ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், அதே போல் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா?.

    அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்ல. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.

    புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போது தான் அது மக்களால் அங்கீரிக்கப்படும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பிரபலமானவர்கள். அதனால் தான் நெருக்கடிகள் அதிகம். ஆனால் நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள், இதுவெல்லாம் எங்களுக்கு பெரிதல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
    • தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் ஓடினர்.

    * எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

    * நமது அரசன் சாதனைகள் பற்றி வடமாநில Youtube சேனல்களில் பேசுகின்றனர்.

    * தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    * நீட் விலக்கு வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அதில் விலக்கு பெற முயற்சிக்காமல் இல்லை.

    * நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான நீதி தரும் ஆட்சியில் மத்தியில் அமையும்

    * மத்தியில் ஒருநாள் தமிழ்நாட்டுக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது.

    * அடுத்து வருவதும் நமது திராவிட மாடல் ஆட்சிதான் என்றார். 

    • டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
    • தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.

    கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
    • தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார். 

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

    26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.

    ×