என் மலர்
இந்தியா

நான் சிவ பக்தன்.. விஷத்தையும் குடிப்பேன் - கண் சிவந்த பிரதமர் மோடி! - காங்கிரஸ் மீது பாய்ச்சல்!
- பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
- அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.
இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பாரத ரத்னா விருது பெற்ற இந்த நாட்டின் மகத்தான புதல்வரும், அசாமின் பெருமையுமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு மோடி பாரத ரத்னாவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். நீங்கள் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் தாங்கி கொள்வேன்.
நான் சிவ பெருமானின் பக்தன். நான் அவதூறுகளின் விஷத்தையும் அருந்தி அதை அகற்றி விடுவேன். ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா, தவறா என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள்" என்று பேசினார்.
இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்கிறார்.
அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.






