என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியுள்ளது. அதிக வசூல் பெற்ற மலையாள சினிமா பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் மோகன்லாலின் எம்புரான் படத்தின் வசூலையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
- ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
அகிலேஷ் யாதவ் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்பியுமான டிம்பிள் யாதவ் உட்பட 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
இன்று விமானம் லக்னோவிலிருந்து டெல்லிக்கு திட்டமிட்டபடி புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக விமானிகள், பயணத்தை ரத்து செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் முனையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 6 ஆம் தேதி, கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறால் கொச்சிக்கு திரும்பியது.
- விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில்.
- 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்," சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது என்றார்.
இதுகுறித்து மேலும் கூறிய அமைச்சர் மூர்த்தி,"கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது" என்றார்.
- மற்ற மொழியும் இந்தியும் இணைந்து செழிப்படையும் என்பதற்கு குஜராத்தி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது
- தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை உயர்த்தினர்.
இந்தி மற்ற இந்திய மொழிகளின் எதிரி அல்ல நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்தி திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, இந்தி மற்ற இந்திய மொழிகளில் எதிரி கிடையாது என்று நான் எப்போதும் கூறுவேன்.
இந்தி மற்ற மொழிகளில் உற்ற நண்பன், அவற்றுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருக்க இல்லை. இந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
குஜராத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மாநில மொழி குஜராத்தி. ஆனால் தொடக்கம் முதல் தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், கேஎம் முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். இந்தி மற்றும் குஜராத்தி இணைந்திருக்கும் குஜராத், இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தி வெறும் பேச்சு மொழி அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு தானாகவே வளரும்" என்றார்." என்று தெரிவித்தார்.
- மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விஜய்யின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி மேலும் கூறுகையில்," வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது.
பாஜக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமோ, தேவையோ திமுகவிற்கு கிடையாது. மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது" என்றார்.
- ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
ஒட்டுமொத்தமாக கலவரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.
தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நீதிபதியாக இருந்தபோது ஊழலுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்த சுசிலாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி அதிகாரபூர்வமாக கடமைகளை தொடங்கினார்.
முதலாவதாக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
முன்னதாக லாய்ன்சவுரில் அமைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு உள்துறை அமைச்சக கட்டிட அலுவலத்தில் தனது பிரதமர் கடமைகளை தொடங்கிய பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கலவரத்தில் காயமடைந்த 134 போராட்டக்காரர்களுக்கும், 57 காவல்துறையினருக்குமான மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுள்ளது.
- முதலமைச்சரின் கடித்ததில் வெறுப்பையும், விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் இருந்தன என்றார் விஜய்.
- நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களின் கதறலை முப்பெரும் விழா என்கின்ற கடிதம் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே. "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம்.
எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான் என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர். இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.
புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.
வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே. கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் எழுப்பும் கேள்விகளில் சில இதோ:
வாக்குறுதி தந்து வாக்குகளை வாங்கி, ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கம்போல ஏமாற்றியதால் உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியதா இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு? மாறாக, கைது செய்து தூக்கிச் சென்று அடக்கி ஒடுக்கித்தானே மகிழ்ந்தது?
அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்தை அன்போடு, கனிவோடு அணுகியதா, இந்த அவலமிகு தி.மு.க. அரசு?
மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக்கூட மதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்ததுதானே இந்தத் திறனற்ற தி.மு.க. அரசு?
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டுக் குதூகலித்ததுதானே இந்தக் கொடிய தி.மு.க. அரசு?
பரந்தூர் விவசாயிகளின் வருடக்கணக்கான போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் வஞ்சிப்பதுதானே இந்த வஞ்சகத் தி.மு.க. அரசு?
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிப்பதுதானே இந்தத் தொழிலாளர் விரோதத் தி.மு.க அரசு?
மீனவர்களின் கண்ணீரைத் துடைக்காமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதுதானே இந்தக் கையாலாகாத தி.மு.க. அரசு?
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத கல்மனம் கொண்ட கபட நாடக அரசுதானே இந்தத் தி.மு.க. அரசு?
இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் தி.மு.க.விற்கு, கொள்கை, கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே?
மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும் வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?
மாபெரும் மக்கள் சக்தி. பெண்கள் சகதி மற்றும் இளைஞர் சக்தியுடன் மக்களரசியலில் முதன்மைச் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்?
யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பை கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய அடிப்படைக் கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு பாதை வகுப்போம். தந்தை பெரியார்,
பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார்.மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்.
நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் படக்குழுவால் தீபாவளுக்கி வெளியிட முடியவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அன்று விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதால். படக்குழு பொங்கலுக்கும் வெளியிடாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது.
- பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழா சிறப்பாக முடிந்த நிலையில், இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது.
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.
இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 55.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
- அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.
இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.






