என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
    • தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது.

    நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி உறுதிமொழி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 2010-2012 கால கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறை கூறுவதற்கு பதிலாக உரிய விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை குறித்து விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. 

    அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை. தேர்தல் ஆணையத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் நான் கேட்கும்போதெல்லாம், அது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

    மேலும் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்திய விதத்திற்காக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய அவர், தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது. இது அதற்கு சேதத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.  

    • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறியது.

    இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும், சஹீ்ப்சதா ஃபர்ஹான் 40 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரப் 11 ரன்களிலும், சுபியாஜ் முக்கீம் 10 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.

    குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, பும்ரா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.

    இதன்மூலம், 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்கை நோக்கி இந்தியா பேட்டி செய்ய களமிறங்குகிறது. 

    • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

    இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.

    ஹர்திக் பாண்டியா, பும்ரா, தலா ஒரு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

    • சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது
    • ணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது

     ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஊர்வசி ரவுடேலா மற்றும் மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED ) சம்மன் அனுப்பியுள்ளது. 

    செப்டம்பர் 15 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக ED தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொல்லப்பட்டது. மிமி சக்ரவர்த்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பியும் ஆவார். 

     சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.

    நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோரும் முன்னதாக விசாரிக்கப்பட்டனர்.

    பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை.
    • சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி 193 தமிழகக் காவல் அலுவலர்களுக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    193 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

    அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க உள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்," கூட்டணி கட்சி தலைவர்கள் அமித் ஷாவை சந்திப்பது வழக்கம் தான். அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

    சந்திப்பு முடிந்த பின்னர் எதற்காக சந்திப்பு என்பதை எடுத்து கூறுகிறோம்" என்றார்.

    • எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன்.
    • எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக.

    இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.

    இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

    குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

    நாக்பூரில் நடந்த வேளாண் நல சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை.

    எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். அவர்கள் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.

    அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையமும் இருக்கிறது.

    நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக" என்று தெரிவித்துள்ளார். 

    • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.

    அட்டகாசமான வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கும் இந்திய அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது.

    இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி பந்து வீச,பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.

    • தமிழக அரசின் பாராட்டு ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரம் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
    • ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடுகளை தன் இசையின் வழியே களைந்த இசை மேதை இளையராஜா.

    திரையிசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.

    இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா.

    இமாலய சாதனை, எளிமை ஒருங்கிணைந்த மாமனிதர். தமிழக அரசின் பாராட்டு விழாவை இளையராஜாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
    • வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது. 

    கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.

    வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

    இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர். 

    • நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.
    • இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 28 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என்று இருந்த வரி முறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் எங்கள் இடர்பாடுகளை எல்லாம் சேகரித்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.

    நாங்கள் பல அமைச்சர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் அதிகாரிகள் அச்சு றுத்தல் வணிகர்களுக்கு இருப்பது பற்றியும் அமைச்சரிடம் எடுத்துச் சொன்னதும் அதையும் உரிய அறிவுரைகள் வழங்கி தீர்த்து வைத்துள்ளார்.

    இப்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரியை மக்களும் மனம் மகிழ்ந்து கட்டுவார்கள். விலைகளும் குறையும்.

    பிரதமர் மோடி பொறுப்பேற்றப் பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. வளர்கிறது. இதற்கு காரணம் மோடியின் கடுமையான உழைப்புதான்.

    அமெரிக்கா 25 சதவீதம், 50 சதவீதம் வரியை நம்மீது திணித்தாலும் அதையும் எதிர்கொண்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

    எத்தனை நாடுகள் இந்தியா மீது பொறாமைப்பட்டாலும் அத்தனை நாடுகளிடம் இருந்தும் மீட்டு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

    உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்  பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

    ×