என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கம் விருதுகள்"

    • சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை.
    • சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி 193 தமிழகக் காவல் அலுவலர்களுக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    193 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    • பல்வேறு விபத்து சூழ்நிலைகளில் மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் முக்தா பதக்கம் வழங்கப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அனந்த நாராயணன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஜீவன் ரக்சா பதக்க விருது பெறத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பல்வேறு நிக்ழவுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகிய வற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சர்கோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    உத்தம் ஜீவன் முக்தா பதக்கம் - துணிச்ச லுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்சா பதக்கம் - தனக்கு காயம் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் 2022- ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் மேற்கண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வர வேற்கப்படுகின்றன .

    விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். 2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை வருகிற 8-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) மாவட்ட விளையாட்டு அலுவலகம் அண்ணா விளையாட்ட ரங்கில் சமர்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும் விவரங்க ளுக்கு , 94444 58277 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×