என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குத் திருட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
    X

    'வாக்குத் திருட்டு' பற்றி விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

    • தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
    • தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது.

    நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி உறுதிமொழி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 2010-2012 கால கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறை கூறுவதற்கு பதிலாக உரிய விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை குறித்து விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

    அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை. தேர்தல் ஆணையத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் நான் கேட்கும்போதெல்லாம், அது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

    மேலும் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்திய விதத்திற்காக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய அவர், தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது. இது அதற்கு சேதத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×