என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஆர் ரஹ்மான்"

    • பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.
    • பொன்னியின் செல்வன் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.

    இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

    இந்த வழக்கில், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டவேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

    • தமிழக அரசின் பாராட்டு ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரம் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
    • ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடுகளை தன் இசையின் வழியே களைந்த இசை மேதை இளையராஜா.

    திரையிசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.

    இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா.

    இமாலய சாதனை, எளிமை ஒருங்கிணைந்த மாமனிதர். தமிழக அரசின் பாராட்டு விழாவை இளையராஜாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம்.
    • திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார்.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் படத்தில் விஷ்வலாக இப்பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் படத்தில் அந்த பாட்டு வராதது மக்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது.

    திரைப்படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மக்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை வீடியோ பாடல் பூர்த்தி செய்யவில்லை.

    பாடலை ஆடியோவாக கேட்கும் போது நமக்குள் அதன் விஷ்வலை கற்பனையாக நாம் வளர்க்கிறோம் ஆனால் படத்தில் அம்மாதிரி இல்லாதபோது நமக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இது இந்த காலக்கட்டத்தில் மட்டுமல்ல 90-ல் காலக்கட்டத்திலும் இதுப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

    1970, 1980களின் நிறைய பாடல்கள் செவி வழியாக அறிமுகமாகி, மனதுக்குள் மெதுவாக ஊடுருவி, நினைவிடுக்குகளில் நிரந்தரமாக நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பாடல்களும் நம்முடைய ஏதோ ஒரு வாழ்வின் நினைவோடு பொருந்திருக்கும்.

    அந்த காலக்கட்டத்தில் பாடலின் விஷ்வல்களை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. எல்லாம் ஒளியும் ஒலியும் என்ற பாடல் நிகழ்ச்சியின் மூலம் செவி வழியாக கேட்கத்தான் முடியும்.

    ஆனால் அதே பாடல்களை திரையரங்கிள் சென்று பார்க்கும் போது என்னடா இது? என நொந்து போகும் அளவிற்கு அதன் விஷ்வல்கள் இருக்கும்.

    அதற்கு உதாரணமாக

    மீன் கொடி தேரில் மன்மத ராஜனா ஊர்வலம் போகின்றான் - இளையராஜா இசையில் வெளியான கரும்பு வில் திரைப்படம்

    ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்- சிவப்பு மல்லி திரைப்படம்

    சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவில் நின்று... - அன்பே சங்கீதா திரைப்படம்

    தேவதை இளம் தேரில் - ஆயிரம் நிலவே வா திரைப்படம்

    இப்படி நிறைய பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    1980கள் மட்டுமல்ல, 1990களின் எவர்கிரீன் பாடல்களும் அப்படித்தான்.

    தூது வளை இலை அரைச்சி...

    எருக்கஞ் செடி ஓரம் இருக்கிப் பிடிச்ச என் மாமா...

    பாடல்கள் எல்லாம் அந்த ரகம் தான்.

    அதனால், பாடல்கள் கேட்டு ரசிப்பதற்கும் மனதுக்கு இனிமையாகவும் இருந்தால் அப்படியே விட்டு விட வேண்டும்.

    முகவரி சொல்லாமல் முகம் தனை மறைத்து, ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரஸ்யமானது, காதலுக்கு மட்டுமல்ல, இது மாதிரியான பாடல்களுக்கும் தான்.

    • ம்ணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் .
    • படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீரா ராஜ வீரா பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கிற்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் கொடுக்க மற்றும் படத்தில் இவர்களுக்கு கிரெடிட் கொடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

    • தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    • மசூதியில் இந்து தம்பதியருக்கு நடந்த திருமணம் தொடர்பான வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்

    சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரெய்லர் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியானது.

    இதற்கிடையே, காம்ரேட் ஃபரம் கேரளா என்ற டுவிட்டர் முகவரியில் வீடியோ ஒன்று சமீபத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 'இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி' என் தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து தம்பதியருக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பது பதிவாகியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், மனிதகுலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு  வைரலாகி வருகிறது.

    • ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார்.

    இதையடுத்து 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் செப்டம்பர் 10-ந்தேதி நடைபெறும் என்றும் முன்னதாக பெற்ற டிக்கெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலிவுட் நடிகர்கள் அக்சய்குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் நடனம் ஆடினர்.
    • ஏர்.ஆர். ரஹ்மான் தனது மகனுடன் பாடல்கள் பாடி அசத்தினார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடக்க விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. சுமார் அரை மணி நடத்திற்கு மேலாக திரைப்பட பிரபலங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

    விழா தொடங்கியதும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தேசிய கொடியுடன் அந்தரத்தில் இருந்து பறந்து வந்தார். அவரிடம் இருந்து தேசியக்கொடியை பெற்றுக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் தேசியக் கொடியை பெற்று மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார்.

    அதன்பின் இருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் தனது மகனுடன் இணைந்து மேடை ஏறினார். ஏ.ஆர். ரகுமான், அவரது மகன் அமீன், சுவேதா மோகன் உள்ளிட்டோர் இணைந்து பல பாடல்களை பாடினர்.

    அதன்பின் பிசிசிஐ தலைவர், செயலாளர், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் மேடை ஏற்றப்பட்டனர். இரண்டு அணி கேப்டன்களான டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் மேடை ஏறினர். கெய்க்வாட் நடப்பு சாம்பியன் கோப்பையுடன் மேடைக்கு வந்தார்.

    • சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
    • ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

    தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.

    டிரெய்லரில் எஸ்ஜே சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

    படத்தில் எஸ்.ஜே. கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.

    பருத்திவீரனில் சரவணன் கேரக்டர் பேசப்பட்டது போன்று, இந்த படத்திலும் சரவணன் கேரக்டர் பேசப்படலாம்.

    புதுப்பேட்டை, வட சென்னை போன்று கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
    • பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

    70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் பெற்றுக்கொண்டார் .

    சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் விருதை பெற்றுக் கொண்டார். இது அவரது 7-வது தேசிய திரைப்பட விழாவாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    • மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட்

    இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை - தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

     

    அமீன் தனது பதிவில் கூறியுள்ளதாவது,

    "என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது.

    ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதனைக் காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×