என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னியின் செல்வன்2"

    • பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.
    • பொன்னியின் செல்வன் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.

    இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

    இந்த வழக்கில், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டவேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.


    பொன்னியின் செல்வன் -2

    இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×