பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம் : 2 கோடி ரூபாய் கொடுக்க ஏ.ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு

ம்ணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம் : 2 கோடி ரூபாய் கொடுக்க ஏ.ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு
Published on

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீரா ராஜ வீரா பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கிற்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் கொடுக்க மற்றும் படத்தில் இவர்களுக்கு கிரெடிட் கொடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com