என் மலர்
சினிமா செய்திகள்

பாடல்களின் விஷ்வல் Expectation VS Reality : அன்றும்! இன்றும்!
- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம்.
- திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் படத்தில் விஷ்வலாக இப்பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் படத்தில் அந்த பாட்டு வராதது மக்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது.
திரைப்படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மக்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை வீடியோ பாடல் பூர்த்தி செய்யவில்லை.
பாடலை ஆடியோவாக கேட்கும் போது நமக்குள் அதன் விஷ்வலை கற்பனையாக நாம் வளர்க்கிறோம் ஆனால் படத்தில் அம்மாதிரி இல்லாதபோது நமக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இது இந்த காலக்கட்டத்தில் மட்டுமல்ல 90-ல் காலக்கட்டத்திலும் இதுப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
1970, 1980களின் நிறைய பாடல்கள் செவி வழியாக அறிமுகமாகி, மனதுக்குள் மெதுவாக ஊடுருவி, நினைவிடுக்குகளில் நிரந்தரமாக நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பாடல்களும் நம்முடைய ஏதோ ஒரு வாழ்வின் நினைவோடு பொருந்திருக்கும்.
அந்த காலக்கட்டத்தில் பாடலின் விஷ்வல்களை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. எல்லாம் ஒளியும் ஒலியும் என்ற பாடல் நிகழ்ச்சியின் மூலம் செவி வழியாக கேட்கத்தான் முடியும்.
ஆனால் அதே பாடல்களை திரையரங்கிள் சென்று பார்க்கும் போது என்னடா இது? என நொந்து போகும் அளவிற்கு அதன் விஷ்வல்கள் இருக்கும்.
அதற்கு உதாரணமாக
மீன் கொடி தேரில் மன்மத ராஜனா ஊர்வலம் போகின்றான் - இளையராஜா இசையில் வெளியான கரும்பு வில் திரைப்படம்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்- சிவப்பு மல்லி திரைப்படம்
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவில் நின்று... - அன்பே சங்கீதா திரைப்படம்
தேவதை இளம் தேரில் - ஆயிரம் நிலவே வா திரைப்படம்
இப்படி நிறைய பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
1980கள் மட்டுமல்ல, 1990களின் எவர்கிரீன் பாடல்களும் அப்படித்தான்.
தூது வளை இலை அரைச்சி...
எருக்கஞ் செடி ஓரம் இருக்கிப் பிடிச்ச என் மாமா...
பாடல்கள் எல்லாம் அந்த ரகம் தான்.
அதனால், பாடல்கள் கேட்டு ரசிப்பதற்கும் மனதுக்கு இனிமையாகவும் இருந்தால் அப்படியே விட்டு விட வேண்டும்.
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைத்து, ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரஸ்யமானது, காதலுக்கு மட்டுமல்ல, இது மாதிரியான பாடல்களுக்கும் தான்.






