என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஹைதியில் 4 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது.
- இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நியூயார்க்:
கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
- அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
- இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பியாங்காங்:
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
- இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
இது ஓர் அற்புதமான உணர்வு. இந்தியாவிற்கு நான் கொடுக்கும் சரியான பிறந்தநாள் பரிசு இது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.
இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கேப்டன் சூர்யகுமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
- உலகின் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார் ஜே.பி.நட்டா.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது.
எங்களிடம் 240 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது.
மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
ஜிஎஸ்டியை 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் என தெரிவித்தார்.
- இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது என்றார்.
சென்னை:
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை.
என் சின்ன வயதில் நான் பூக்களைப் பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை.
நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அதைப் பற்றிதான் பேசுகிறது. என்னை படங்களில் மட்டும் பார்த்து ரசியுங்கள். மற்ற நேரம் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி வரும் 26-ம் தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் 17, 18-ம் தேதி களில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதன்படி, வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 29-ம் தேதி (திங்கட்கிழமை) பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளது.
- இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
- டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தனர்.
துபாய்:
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது..
எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்தனர். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இந்திய வீரர்கள் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு அணி வீரர்களும் கை குலுக்காததால் No Handshake எனும் வார்த்தை டிரெண்டாகி வருகிறது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
- 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
- ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நாட்டிங்காம்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருது பில் சால்டுக்கு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை முதல் நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் விரைவில் 'வடசென்னை 2' படம் உருவாக உள்ளதாக 'இட்லி கடை' விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
- தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
- தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி உறுதிமொழி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 2010-2012 கால கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறை கூறுவதற்கு பதிலாக உரிய விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை குறித்து விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை. தேர்தல் ஆணையத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் நான் கேட்கும்போதெல்லாம், அது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.
மேலும் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்திய விதத்திற்காக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய அவர், தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது. இது அதற்கு சேதத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.






