ஹைதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 40 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

ஹைதியில் 4 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது.இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஹைதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 40 பேர் பலி: ஐ.நா. கண்டனம்
Published on

நியூயார்க்:

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com