என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்?
    • இவரால் மழையில் பேசமுடியாது காகிதம் நனைந்திடும்

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தனது கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் உதறிவிட்டு அரசியலுக்கு வந்ததாக விஜய் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் "நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தெற்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மானுடன் தமிழன். இந்தியாவை இந்துக்கள் நாடு என்று கூறுவை ஏற்க இயலாது. மொழியை இழந்து விட்டால் உன் இனத்தை, அடையாளத்தை இழந்து விடுவாய்.

    எல்லா மொழியும் மனிதர்களால் பேசப்பட்டது. ஆனால் தமிழ்மொழி இறைவனால் பேசப்பட்டது. கோவில்களில் இருந்து தமிழ் இன்று வெளியேற்றப்பட்டுள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த போராட வேண்டிய நிலை உள்ளது.

    நாங்கள் தளபதி, தளபதி என்று கத்த வந்த கூட்டம் அல்ல. இந்த தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் கூடி கலைகிற காகங்கள் அல்ல. கூடி பெய்கிற மேகங்கள் என்று காட்ட வேண்டும்.

    தம்பி விஜய் தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு, வருமானத்தை விட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறார். யார் அவரை அரசியலுக்கு அழைத்தார்கள்?. வீட்டு வாட்ச்மேன் கூட அரசியலுக்கு அழைக்கவில்லை.

    என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. சேவை செய்ய வந்தால் சேவை செய்.

    எம்.ஜி.ஆர். 1½ மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் படிப்பார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்களின் மொழியின் பேசுவார். ஸ்டாலின் கூட துண்டு சீட்டு தான். ஆனால் எடப்பாடியும், தம்பி விஜயும் தான் முழு சீட்டு. இவர்களால் மழையில் பேச முடியாது. ஏனெனில் சீட் நனைந்து விடும். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன் இருவரில் யார் சிறந்தவரென நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

    தமிழகத்திற்கு 1½கோடி வட மாநிலத்தவர்கள் வந்து விட்டனர். இவர்கள் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் என்றாலும், ஒரு மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி அவர்களின் மாநிலத்திற்கு செல்கிறது. ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு டாஸ்மாக் வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி தான்.

    நீ உழைப்பில் இருந்து வெளியேறி விட்டதால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளிமாநிலத்திற்கு செல்கிறது. பீகாரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 6½ லட்சம் ஓட்டு உள்ளது. இவர்கள் எல்லாம் பாஜக ஆதரவாளர்கள். இதை ஓட்டுக்காக கூறவில்லை. இதை சொல்வது எனது கடமை.

    விஜய் தமிழர் என்றோ, தமிழ் என்றோ, தமிழர் உரிமை, தமிழ் வளம் என்று பேசியுள்ளாரா?. பேசமாட்டார். எல்லோரும் ஒன்று என்பவர், ஆந்திராவில் கட்சியை ஆரம்பிக்க வேண்டியது தானே?. எதையாவது பேச வேண்டியது. ஏனென்றால் விஜய் பிரசாரத்தில் தனக்கு எழுதி கொடுப்பதை பேசுகிறார். அவருக்கு ஆந்திராக்காரர் தான் எழுதி கொடுக்கிறார்.

    விஜய் சாத்தியமில்லாததை சொல்லமாட்டோம் என்கிறார். எதை செய்வார். ஒன்றும் செய்யமாட்டார். அவரது பேச்சு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பகவந்த் கேசரி என்ற படத்தில் பெண்கள் பாதுகாப்பு நோ காம்பரமைஸ் என்பார். அந்த படத்தை டப்பிங் செய்து ஜனநாயகன் எடுத்து வரும் விஜய், பாலகிருஷ்ணா வசனம் பேசுவது போன்று இப்போது தமிழக மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசிவருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். அதன்படி கோவை தெற்கு தொகுதியில் பேரறிவாளன், கவுண்டம்பாளையம்-கலாமணி ஜெகநாதன், சிங்காநல்லூர்-நேரு, வால்பாறை-உமாதேவி, மேட்டுப்பாளையம்-கோபாலகிருஷ்ணன், தொண்டாமுத்தூர்-ரஜிப்பூர் நிஷா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் தொண்டரின் பெண் குழந்தைக்கு ஈழ துவாரகா என பெயர் சூட்டினார்.

    • கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
    • தனிநபர் பண பரிவர்த்தனை ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.

    இன்று முதல் UPI மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

    தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.

    • தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!
    • அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!

    அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!

    இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி

    ஆட்சி அமைக்க முடியுமா?

    நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?

    என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்

    தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!

    அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அஇஅதிமுக

    குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

    குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான #அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை #அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்.

    அண்ணா நாமம் வாழ்க!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
    • டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைதானார்.

    புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இதனால் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
    • பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜனநாயகப் பேரதிசயம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!

    தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',

    பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    எண்ணம் - பேச்சு - எழுத்து - செயல் அனைத்திலும் தமிழின முன்னேற்றம் ஒன்றே என்ற 'கட்டுப்பாடு',

    இவையே நம் அண்ணா!

    'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார்.

    அண்ணா- கலைஞர் வழியில் கழகத்தலைவர் @mkstalin தலைமையில் மீண்டும் கழக அரசை அமைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.

    வாழ்க அண்ணா!

    வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • தொழில்நுட்ப சிக்கல்களால் வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வோர் அவதியடைந்தனர்.

    2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

    இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்துவரும் நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களால் அவதியடைந்துள்ளனர்.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.

    ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்த பசை 'Bone-02' என அழைக்கப்படுகிறது.
    • 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

    'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி.
    • திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-30 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 7.01 மணி வரை பிறகு நவமி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.15 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்

    அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-களிப்பு

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- உதவி

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-உவகை

    மீனம்-பண்பு

    • இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
    • உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.

    உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய டாக்டர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

    • திமுக எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா
    • தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்,

    தமிழன்னை தந்திட்ட தலைமகன்!

    திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ?♥

    தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!

    என்று தெரிவித்துள்ளார். 

    • 2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம்
    • அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்.

    துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வட்ட, பாக திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.

    கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், அதற்கு இளைஞர் அணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக்கூறியும் உரையாற்றினோம்.

    2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.

    'அரசியல் புரிதல் இல்லாமல் கூச்சல் எழுப்பும் கூட்டம்' என்று த.வெ.க. தொண்டர்களை தான் திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் விஜயை உதயநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அகலும் நாள். மனதளவில் இருந்த காரியம் ஒன்று செயலளவில் நிறைவேறும். உத்தியோகத்தில் செய்த புது முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். அலுவலகப் பணிக்காக அலைச்சல் ஏற்படலாம்.

    கடகம்

    எதிர்பாராத உதவி எளிதில் கிடைக்கும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. புதிய உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். தொழில் சீராக நடைபெறும்.

    சிம்மம்

    தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடும்.

    கன்னி

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிகளிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    துலாம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் மீது கோபப்படலாம்.

    தனுசு

    பிரச்சனைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மகரம்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை அடையும் நாள். திருமண வாய்ப்பு கைகூடி வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கும்பம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    குடும்பச் சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்தவர் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    ×