என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் விளக்கம்
- எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க உள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்," கூட்டணி கட்சி தலைவர்கள் அமித் ஷாவை சந்திப்பது வழக்கம் தான். அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.
சந்திப்பு முடிந்த பின்னர் எதற்காக சந்திப்பு என்பதை எடுத்து கூறுகிறோம்" என்றார்.






