என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி தலைமையில் உலகில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது- விக்கிரமராஜா
    X

    பிரதமர் மோடி தலைமையில் உலகில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது- விக்கிரமராஜா

    • நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.
    • இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 28 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என்று இருந்த வரி முறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் எங்கள் இடர்பாடுகளை எல்லாம் சேகரித்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.

    நாங்கள் பல அமைச்சர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் அதிகாரிகள் அச்சு றுத்தல் வணிகர்களுக்கு இருப்பது பற்றியும் அமைச்சரிடம் எடுத்துச் சொன்னதும் அதையும் உரிய அறிவுரைகள் வழங்கி தீர்த்து வைத்துள்ளார்.

    இப்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரியை மக்களும் மனம் மகிழ்ந்து கட்டுவார்கள். விலைகளும் குறையும்.

    பிரதமர் மோடி பொறுப்பேற்றப் பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. வளர்கிறது. இதற்கு காரணம் மோடியின் கடுமையான உழைப்புதான்.

    அமெரிக்கா 25 சதவீதம், 50 சதவீதம் வரியை நம்மீது திணித்தாலும் அதையும் எதிர்கொண்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

    எத்தனை நாடுகள் இந்தியா மீது பொறாமைப்பட்டாலும் அத்தனை நாடுகளிடம் இருந்தும் மீட்டு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×