என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார்
- மஹிகா சர்மாவை டேட் செய்துவருகிறார் ஹர்திக்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காரின் பின்னால் "தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு" என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024-ல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர்.
விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
- கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த அழைப்பிதழை வைத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகை அவர்களால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த பதிவை பகிர்ந்து திருமுருகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், "இந்த நாராயணன் போல கீழ்த்தரமானவர்களை நாம் அதிகமாக பாஜகவில்தான் பார்க்க இயலும். இவர்கள் கோமியத்தை மட்டுமே குடித்து வளர்வதால், மூளை செயலிழந்து இருப்பது இயல்பானதுதான். திருமணப்பத்திரிக்கையை பார்த்தால் திரு.செல்வப்பெருந்தகை கிருத்துவராக தெரிகிறது, ஆகவே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்பதாக 'தற்குறி' நாராயணன் எழுதுகிறார். தமிழுக்கு எதிரான 'ஸ்மார்த்த மதத்தை' சார்ந்த நாராயணின் சாணிமூளையை எளிதில் அம்பல
திரு.செல்வப்பெருந்தகையும், அவரது மனைவி, மகளின் பெயரும் கிருஸ்துவப்பெயர் அல்ல. திரு.செல்வப்பெருந்தகையின் மனைவி திருமதி உமையாள் என்பதும், மகள் செல்வி அக்ஷயா பிரியா என்பதும் கிருஸ்துவப்பெயரல்ல. நாராயணனின் சாணி மூளைக்கு புரியும்படி சொன்னால்,
'உமையாள்' என்பது முழுமையான தமிழ் தெய்வத்தின் பெயர், சைவப்பெயர். சிவனின் மனைவி பார்வதியின் மற்றுமொரு பெயராக திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. பிறகெப்படி, திரு.செல்வப்பெருந்தகையை கிருத்துவர் என முத்திரை குத்துகிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மணமகன் குடும்பத்தார் பெயரே கிருத்துவ பெயராக உள்ளது. மதம்-சாதி கடந்து ஆண்-பெண் நேசத்தை போற்றுகிற பண்பைத்தான் திரு.செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமணம் நமக்கு உறுதி செய்கிறது.
தன் மகளை திருமணம் செய்யப்போகும், மணமகன் குடும்பம் கிருத்துவராக இருப்பதற்காக திரு.செல்வப்பெருந்தகையை எவ்வாறு கிருத்துவரென முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்யச் சொல்கிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மகள் திருமணம், மருமகனின் இல்லவழியில் கிருத்துவ முறையில் நடப்பதால் செல்வப்பெருந்தகை கிருத்துவர், அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதியிழக்க வேண்டும் என நாராயணன் சொல்வது கலவர புத்தி, சங்கித்தன புத்தி.
சனாதன-சாணிகளுக்கு மதம், சாதி பாகுபாடு பார்ப்பதைத் தவிர, ஆக்கப்பூர்வமாக மூளை செயல்படாது. இவர்களை போன்ற கலவரக் கும்பல்களை குஜராத்துக்கு விரட்டுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
நாராயணன் போன்ற 'ஸ்மார்த்த' மதத்தை சார்ந்த பார்ப்பனர்கள், ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்குள் தமிழர்களுக்கு எதிராக கலவரம், கொலை, கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் என்பது வரலாறு.
செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமண விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். மணமகள் செல்வி அக்ஷயா ப்ரியா மணமகன் திரு.ஆர்ஜன்ராயர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் மொழிபோல், தமிழ்நாடு போல் அனைத்து வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். உங்களது வம்சாவழியினர், சாதி-மத-சனாதன பேதமற்ற தமிழ்நிலத்தில் வாழும் வகையில் சங்கிகளை விரட்டியடித்து, தமிழ்நாட்டை தூய்மைப்படுத்துவோம் என உறுதி கூறி வாழ்த்துகிறோம். நீங்களும் வாழ்த்துங்கள். சனாதனம் ஒழியட்டும். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் வெளியேறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.
செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.
டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.
எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.
- சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
- கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
- முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை:
மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-
அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.
எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
- ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
இந்நிலையில் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.
* ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.
* 234 தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.
* தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மமிதா பைஜூ ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில், "S46-க்கான குக்கிங் நடைபெறுகிறது. மிக விரைவில் வருகிறோம், விரைவில் அப்டேட்," என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

- தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று தெரிவித்தார்.
- எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்தார்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய ராகவேந்திரா. இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஒன்றில் இரட்டை கொலைகள் நடக்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த கொடூர கொலைகள் நகர மக்களை உறைய செய்கிறது.
இதையடுத்து விசாரணையும் தீவிரமடைகிறது. இதற்கிடையில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவை போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர போலீசார் உறைந்து போகிறார்கள். அது என்ன? கொலைகளை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
நடிகர்கள்
போலீஸ் அதிகாரியாக வரும் விஜய ராகவேந்திரா பொறுப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பல்வேறு காட்சிகளில் பாராட்டும்படி உள்ளது. கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. உஷா பந்தாரி உள்பட நடிகர் -நடிகைகள் அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
கிரைம் - திரில்லர் பாணியில் யாருமே யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. புதுமையான கதையும், காட்சி பின்னணியும் படத்துக்கு பலம்.
உளவியல் ரீதியான, மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரின் உள்ளார்ந்த குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பாராட்டக்கூடியது. சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஹேமந்த் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு.
இசை
நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.
ரேட்டிங்-3/5
70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
இதில், தமிழ் திரைப்படங்கள் வென்ற ஒட்டுமொத்த விருதுகளின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..,
சிறந்த திரைப்படம் - அமரன்
சிறந்த இயக்குநர் - பி.எஸ். வினோத்ராஜ் (கொட்டுக்காளி), ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த திரைப்படம் (விமர்சகர்) - மெய்யழகன் (பிரேம்குமார்)
சிறந்த நடிகர் (முதன்மை பாத்திரம்) - சிவகார்த்திகேயன் (அமரன்)
சிறந்த நடிகர் (விமர்சகர்) - அரவிந்த சாமி (மெய்யழகன்)
சிறந்த நடிகை (முதன்மை பாத்திரம்) - சாய் பல்லவி (அமரன்)
சிறந்த நடிகை (விமர்சகர்) - அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த நடிகர் (குணச்சித்திரம்) - கார்த்தி (மெய்யழகன்)
சிறந்த நடிகை (குணச்சித்திரம்) - சுவாசிகா (லப்பர் பந்து)
சிறந்த இசை ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த பாடலாசிரியர் - உமா தேவி (யாரோ இவன் யாரோ - மெய்யழகன்)
சிறந்த பாடகர் (ஆண்) - ஹரிச்சரண் (ஹே மின்னலே - அமரன்)
சிறந்த பாடகர் (பெண்) - ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே - அமரன்)
சிறந்த அறிமுக இயக்குநர் - சுரேஷ் மாரி (ஜெ பேபி), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)
சிறந்த அறிமுக நடிகர் - ரிது ஹரூன் (தக்ஸ்)
சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)
சிறந்த ஒளிப்பதிவு - சி.ஹெச். சாய் (அமரன்)
தலைச்சிறந்த நடிப்பு - விக்ரம் (தங்கலான்)
- 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
- தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பல தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளது. இது தவிர நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.
இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.
இந்த நிலையில் இன்று தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தி.மு.க. குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் இல்லை என்றாலும் 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
* தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






