என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய யூனியன் முஸ்லீம் லீக்"

    • தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த 3 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
    • தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பல தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளது. இது தவிர நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.

    இந்த நிலையில் இன்று தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தி.மு.க. குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் இல்லை என்றாலும் 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.

    * தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட் சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

    தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.

    முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் 26-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைத்துள்ளது.

    • கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
    • காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

    அதன்பின்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்.

    காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யயப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்.
    • நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    ஐயா அவர்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×