என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
- காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.
அதன்பின்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்.
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.
Next Story






