என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "indian union muslim league"
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
- தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது.
மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கலைஞர்.
இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கலைஞர் நினைத்தது இல்லை. தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது.
நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளீர்கள். விரைவில் அவர்கள் விடுதலை தொடர்பாக கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.
- தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்படும்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
கடையநல்லூர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.எம்.முகமதுஅபூபக்கர் கடையநல்லூரில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு எந்த உதவியும் செய்யாத மத்திய அரசு ,தற்போது அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் வாக்கு வங்கியை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நிதிநிலை அறி க்கை. இதனால் எந்த சாமானியருக்கும் பயனில்லை. தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. முதல் நாள் அகில இந்திய அளவிலான முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். 75-வது முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டில் இந்தியாவில் உள்ள ஏழை- எளிய இஸ்லாமிய பெண்களுக்கு 75 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.2.25 கோடி மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறது.
இந்தாண்டு ஹஜ் புனித பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம். அதை மத்திய அரசு ஏற்று 1.75 லட்சம் பேர் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, முஸ்லிம் லீக் நகர மன்ற உறுப்பினர் அக்பர் அலி, மாநில பேச்சாளர் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .
- மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார்.
மங்கலம் :
மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு மிதிவண்டியும்,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இரண்டாம் பரிசாக ஹாட் பாக்சும் ,மூன்றாம் பரிசாக ஹாட் பாக்சும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் ,பள்ளி தலைமையாசிரியை ,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர்சங்கத்தலைவர் ரபிதின், மங்கலம்-முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகி எபிசியண்ட் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
- தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மங்கலம் அக்பர் அலியின் 8-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.மேலும் மங்கலம் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மங்கலம் பகுதியை சேர்ந்த சலவைத்தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நலத்திட்ட உதவிகளை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹா நசீர் தலைமையில் நடைபெற்றது. ,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்கிரியா சேட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,மங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரபிதீன்,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜக்கிரியா ,இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் மங்கலம் சிராஜ்தீன்,மாணவரணி மாநில துணைத்தலைவர் மங்கலம் அப்பாஸ்,காங்கிரஸ் நிர்வாகி சபாதுரை,மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் இத்ரீஸ்,எஸ்.டி.பி.ஐ.கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர்,தமுமுக. கட்சியைச் சேர்ந்த நிஷாத், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
- திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.
மங்கலம் :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி அமைப்பான முஸ்லிம் யூத் லீக் அமைப்பின் கேரளா மாநில பொது செயலாளர் பி.கே.பிரோஸ் திருப்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்தார்.இந்நிகழ்ச்சியானது மங்கலம் நால்ரோடு அருகே உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் ஒன்றிய தலைவர் ஜக்கரிய்யா சேட் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த புத்தூர் பாபு துவக்கி வைத்தார்.இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், மாணவர் பேரவை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செய்யது முஸ்தபா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் சிராஜ்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணை தலைவர் அப்பாஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட செயலாளர் சல்மான்,துணை செயலாளர் முபீஸ்,மங்கலம் யூத் லீக் நகர தலைவர் சாதிக் அலி,பொருளாளர் ரியாஸ்,முஸ்லிம் மாணவர் பேரவை மங்கலம் நகர தலைவர் ஹக்கிம்,யாசர், கே.எம்.சி.சி.மாவட்ட தலைவர் அக்பர் அலி,மாவட்ட பொது செயலாளர் உவைஸ்,மாவட்ட செயலாளர் சாலிமார் அப்பாஸ்என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஒன்றிய செயலாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர்மொகிதீன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஓரின சேர்க்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பண்பாட்டுக்கு எதிரானது.
இந்த தீர்ப்பை இந்திய மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த தீர்ப்பை மற்ற 31 அமர்வு நீதிபதிகள் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்க வேண்டும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தி.மு.க.வில் பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் பராம்பரிய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
மு.க.அழகிரி தன் தந்தைக்கு கடமை செய்வதற்காக அமைதி பேரணி நடத்தியுள்ளார். இதனால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
சுதந்திர இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் தனி மனிதன் விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாணவி சோபியாவை கைது செய்ததை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KaderMohideen
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
