என் மலர்
இந்தியா
- சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.
அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.
பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
- அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.
ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
- வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
- ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தம் குறித்து இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில், வர்த்தக ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது விக்சித் பாரத் கனவை நனவாக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் ஒரு சக்தி. அதன் உதவியால் எல்லாமே சாத்தியமாகும். நாட்டு மக்களின் இந்த சக்தியே, வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமையும்," என தெரிவித்துள்ளார்.
- ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
- மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.
மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
- இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இது இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ x தளப் பதிவில், "போர் நிறுத்தத்தை போல, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
• அமெரிக்காவிற்கு எதிரான சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத தடைகளை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாக திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

• அந்த அறிக்கையில் விவசாய துறையை அமெரிக்காவிற்காக திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உண்மையில் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன?
• மோடி அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டதா?
• மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குவது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.
மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு, அனைத்து விவரங்களையும் பகிர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.
கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.
அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.
கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.
Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.
- சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
- மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட், முதலீடுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நுகர்வை அதிகரிப்பதற்கான முன்னுரிமை கருவியாக முதலீட்டை பார்க்கிறது.
சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டின் நாணயம் மீதும் நம்பிக்கை இல்லாததால், அவர்கள் தங்கம் மீது முதலீடு செய்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பல்வேறு மத்திய வங்கிகளும் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றன.
மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தில் குழந்தைகள் ஏராளமான பணத்தை இழக்கின்றன.
எனவே, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பெற்றோர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனவே, அந்த வணிகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை 4.3 சதவீதமாக குறைக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
பங்கு விற்பனையும், சொத்துகளை பணமாக்குவதும் நீடிக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனையை மத்திய அரசு ஊக்குவிக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கி பங்கு விற்பனைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. குறைப்பாலும், வருமானவரி விலக்கு அதிகரிப்பாலும் தனிநபர் நுகர்வு அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் நுகர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன.
- இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனியார் செய்தி சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படுகிறீர்களா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும். தி.மு.க. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
- இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
- இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.
கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.
Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் டிரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது.
எங்களது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.






