என் மலர்
இந்தியா
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
- பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.
பாட்னா:
பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.
நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.
எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.
- சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
- நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பே ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது.
அதேபோல் இப்போது ஜிஎஸ்டியிலும் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது.
சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும்.
பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.
உங்களுக்குப் பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும்.
இந்தியர்கள் அன்றாட வாழ்வில் வெளிநாட்டு பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனா்.
உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்.
சிறு, குறு, தொழில்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா ஆகும்.
- ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று மாலை உரையாற்றி வருகிறர். அப்போது அவர் கூறியதாவது:
நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பு ஜிஎஸ்டி சீர்திருத்தம்.
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என நம்புகிறேன்.
வரிகுறைப்பு நடவடிக்கை முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்,
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.
தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமையும் என தெரிவித்தார்.
- துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு எந்த நாளில் வந்தாலும் அவரை வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வர உள்ளதாக தெரிவித்தார்.
துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர இருப்பதாகவும், இது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில், சரியான தேதி விவரம் தெரிய வரவில்லை. அதேநேரம் அவர் எந்த நாளில் வந்தாலும் வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
- மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி மாவட்டம், புவனகிரி அடுத்த அடகுதூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றார். சங்கர் கூலி வேலையும், மஞ்சுளா வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு நடந்தது. விரக்தி அடைந்த மஞ்சுளா கடந்த 14-ந் தேதி ஐதராபாத் அனுபுரத்தில் உள்ள தனது சகோதரி ராணி வீட்டிற்கு வந்தார்.
சங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை தேடி ராணி வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்து இனி நான் மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதி அளித்தார்.
நேற்று காலை ராணி அவரது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றனர். வீட்டில் சங்கர் மஞ்சுளா அவரது குழந்தைகள் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்த சங்கர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சங்கர் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு தப்பி சென்றார்.
காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஞ்சுளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- ஜிஎஸ்டி குறைப்பால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 மற்றும் H1-B விசா கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
- தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இது தொடர்பான ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து 'வாக்குத் திருட்டு' புகார்களையும் விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது அம்மாநில காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறை ஏடிஜிபி B.K. சிங், குழுவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது.
அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்,
மேலும், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது.
தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மோகன்லால் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் இருக்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவை என்னை ஊக்கத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகின்றன. சினிமா கலைக்கும், எனது பயணத்தை ஒளிரச் செய்த அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது.
இந்த பயணத்தின்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாக இரு நாடுகளும் தெரிவித்தன. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.
- இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
- இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது.
இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
Mercedes-Benz Hurun India Wealth Report 2025 வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இருந்த 4,58,000 ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள் 2025 ஆம் ஆண்டில் 8,71,700 ஆக அதிகரித்துள்ளது.
இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
1 கோடியே 8.5 லட்சம் ரூபாய், அதற்கு மேல் நிகர மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது. இங்கு 1,42,000 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) உள்ளன.
மாநில அளவில், மகாராஷ்டிரா 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அமெரிக்கா முக்கிய இடமாக உள்ளது.
இந்த பணக்காரர்களில் 60% பேர் தங்கள் ஆண்டு செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
- பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
- ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.
தசாரா விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் ராம் லீலா நாடகங்கள் பரவலாக வருடந்தோறும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் டெல்லியில் பிரபலமான 'லவ் குஷ் ராம்லீலா' நாடகக்குழு, மாடல் அழகி பூனம் பாண்டேவை 'மண்டோதரி' (ராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர், 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் அமைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதி, பூனம் பாண்டேவை மாற்றக் கோரியுள்ளார்.
பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் தலைவர் அர்ஜுன் குமார், "ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.
அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பூனம் பாண்டே அவர்களில் ஒருவர் மட்டுமே" என்று தெரிவித்தார்.
நாளை (செப்டம்பர் 22) நாடகம் தொடங்க உள்ள நிலையில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது.
- H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும்
- அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற டிரம்ப்பின் உத்தரவு இந்தியர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவரான மகேந்திர தேவ் நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "இந்த கட்டண உயர்வு, திறமையான இந்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவர்கள் தங்கள் நாட்டிலேயே பணிபுரியவும், தொழில் தொடங்கவும் ஊக்குவிக்கும்.
இதன் விளைவாக, பெங்களூரு, ஐதராபாத், மற்றும் குரேகான் போன்ற இந்திய நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருகும். இது இந்தியாவின் 'விக்சித் பாரத்' கனவுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மனிதநேய விளைவுகளை உருவாக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.






