என் மலர்
நீங்கள் தேடியது "America dollar"
- இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
- இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக ரூ.90-யை இன்று கடந்துள்ளது. நேற்று வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.90.16-க்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஆகியவை ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அன்னிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.
இதனால் அன்னிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
- மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.
பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை:
அன்னிய செலாவணியின் இருப்பு மாற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காணரங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், உரிய பலன்கள் கிடைக்காமல் இந்திய பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்ற நிதி கொள்கை முடிவை அறிவித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி அடைந்து 74 ரூபாய் 22 காசு ஆனது.
அதன் பிறகு சற்று பணத்தின் மதிப்பில் எழுச்சி ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை 73 ரூபாய் 76 காசாக இருந்தது. நேற்று மார்க்கெட் ஆரம்பமான போது அதில் 14 காசு உயர்ந்து இருந்தது.

அதன் பிறகு அதிகபட்சமாக 74 ரூபாய் 10 காசு ஆனது. நேற்றைய மார்க்கெட் முடிவில் 74 ரூபாய் 6 காசாக இருந்தது.
இத்தனைக்கும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 4 டாலர் வரை குறைந்துள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 86.74 டாலராக இருந்தது. அது, இப்போது 82.89 டாலராக குறைந்துள்ளது.
கச்சா எண்ணை விலையின் தாக்கத்தால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக கூறினார்கள். ஆனால், கச்சா எண்ணை விலை வீழ்ச்சி அடைந்த போதும் இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவியதால் பணத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ந்துள்ளது என்று கூறினார். #IndianRupee #Dollar






