என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆரவல்லி மலைத்தொடருக்கு மரண தண்டனை விதித்த மோடி அரசு.. சுரங்க மாஃபியாவுக்கு சிவப்பு கம்பளம் - சோனியா காந்தி
    X

    ஆரவல்லி மலைத்தொடருக்கு மரண தண்டனை விதித்த மோடி அரசு.. சுரங்க மாஃபியாவுக்கு சிவப்பு கம்பளம் - சோனியா காந்தி

    • 100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு திறந்த அழைப்பாகும்.
    • நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

    ஆரவல்லி மலைத்தொடரில் நூறு மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்க நடவடிக்கைகளை அனுமதிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் கொள்கைகளில் திருத்தம் செய்துள்ளது.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

    அதில், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பரவியுள்ள இந்த மலைகள், நாட்டின் வரலாறு மற்றும் புவியியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

    சட்டவிரோத சுரங்கத்தால் அவற்றின் இயற்கை வளம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு அவற்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

    100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளில் சுரங்கத்தை அனுமதிப்பது சுரங்க மாஃபியாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் திறந்த அழைப்பாகும்.

    இது சுற்றுச்சூழல் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு சான்றாகும். இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும். மத்திய அரசு கொண்டு வந்த இந்தப் புதிய கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×