என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru cop"

    • புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

    புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.

    2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

    டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    பெங்களூரில் கொள்ளையனை விரட்டி பிடித்த போலீஸ்காரர், புதிதாக திருமணமானவர் என்பதால் அவருக்கு விடுப்பு அளித்து தேனிலவுக்கு கேரளா செல்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
    பெங்களூர்:

    பெங்களூர் பெல்லாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் வெங்கடேஷ் (வயது30). இவர் வீரதீர செயல்புரிந்து போலீஸ் அதிகாரியின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

    நேற்று முன்தினம் அதிகாலை வெங்கடேஷ் பணியில் இருந்தபோது இரவு ரோந்து சென்றார். சர்ஜாபூர் மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்தப் பகுதியில் ஒருவர் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடிவந்தார். அதைக் கேட்ட போலீஸ்காரர் வெங்கடேஷ் அந்தப் பகுதி நோக்கி விரைந்தார்.

    அப்போது 3 கொள்ளையர்கள் போலீஸ்காரரைப் பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர். உடனே அவர்களை போலீஸ்காரர் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றார். 5 கி.மீ தூரம் விடாமல் விரட்டினார்.

    தனது மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளிவிட்டு நிறுத்தினார்.

    உடனே ஒரு கொள்ளையன் அருகில் இருந்த மைதானத்தை நோக்கி ஓடினான். அவனை போலீஸ்காரர் வெங்கடேஷ் விரட்டிச் சென்று பிடித்தார். இந்த சமயத்தில் மற்ற 2 கொள்ளையர்களும் தப்பி விட்டனர்.

    பிடிபட்ட கொள்ளையன் பெயர் அருண்தயாள் (20). அவன் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். இவன் பல கொள்ளைகளில் தேடப்பட்டு வந்தவன் என்று தெரியவந்தது. சம்பவத்தன்று இவன் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தான். போலீஸ்காரர் வெங்கடேஷ் அவனை விரட்டிப் பிடித்ததால் கொள்ளை தடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ்காரர் வெங்கடேஷை துணை கமி‌ஷனர் அப்துல் அகத் பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் போலீஸ்காரர் வெங்கடேஷ் புதிதாக திருமணம் ஆனவர் என்பதால் அவருக்கு விடுமுறை அளித்து தேனிலவுக்கு கேரளா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர் மனைவியுடன் தேனிலவு கொண்டாட கேரளா செல்கிறா. அங்குள்ள படகு இல்லத்திலும் தங்க உள்ளார். 
    ×