என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் வெங்கடேஷ்"
பெங்களூரில் கொள்ளையனை விரட்டி பிடித்த போலீஸ்காரர், புதிதாக திருமணமானவர் என்பதால் அவருக்கு விடுப்பு அளித்து தேனிலவுக்கு கேரளா செல்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
பெங்களூர்:
பெங்களூர் பெல்லாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் வெங்கடேஷ் (வயது30). இவர் வீரதீர செயல்புரிந்து போலீஸ் அதிகாரியின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை வெங்கடேஷ் பணியில் இருந்தபோது இரவு ரோந்து சென்றார். சர்ஜாபூர் மெயின்ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்தப் பகுதியில் ஒருவர் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடிவந்தார். அதைக் கேட்ட போலீஸ்காரர் வெங்கடேஷ் அந்தப் பகுதி நோக்கி விரைந்தார்.
அப்போது 3 கொள்ளையர்கள் போலீஸ்காரரைப் பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர். உடனே அவர்களை போலீஸ்காரர் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றார். 5 கி.மீ தூரம் விடாமல் விரட்டினார்.
தனது மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளிவிட்டு நிறுத்தினார்.
உடனே ஒரு கொள்ளையன் அருகில் இருந்த மைதானத்தை நோக்கி ஓடினான். அவனை போலீஸ்காரர் வெங்கடேஷ் விரட்டிச் சென்று பிடித்தார். இந்த சமயத்தில் மற்ற 2 கொள்ளையர்களும் தப்பி விட்டனர்.
பிடிபட்ட கொள்ளையன் பெயர் அருண்தயாள் (20). அவன் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். இவன் பல கொள்ளைகளில் தேடப்பட்டு வந்தவன் என்று தெரியவந்தது. சம்பவத்தன்று இவன் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தான். போலீஸ்காரர் வெங்கடேஷ் அவனை விரட்டிப் பிடித்ததால் கொள்ளை தடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ்காரர் வெங்கடேஷை துணை கமிஷனர் அப்துல் அகத் பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் போலீஸ்காரர் வெங்கடேஷ் புதிதாக திருமணம் ஆனவர் என்பதால் அவருக்கு விடுமுறை அளித்து தேனிலவுக்கு கேரளா சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர் மனைவியுடன் தேனிலவு கொண்டாட கேரளா செல்கிறா. அங்குள்ள படகு இல்லத்திலும் தங்க உள்ளார்.