என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா.
    • இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்

    RINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அவ்விழாவில்

    தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...

    பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும்.

    இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது..

    எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம்,

    தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது...

    இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.

     

    படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் நாயகன் டிடக்டிவ் போல் எந்த குற்றத்திற்கு பின் உள்ள ரகசியங்களை தேடும் பணியில் உள்ளார். படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது.

    இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள அபர்னா மாலில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    அதில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட் டியில், "மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை கற்று இருக் கிறேன். விமர்சனம், பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்த்தேன்.

    பல வருடங்களுக்கு பிறகு துபாயில் புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்த போது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களில் சுற்றியது தான் நினைவுக்கு வந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை.

    என்னை மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்து விட்டேன். பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வர வில்லை. காசோலை கூட பணம் இன்றி திரும்பி வந்து இருக் கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் டைரக்ட் செய்வேன்

     

    ரசிகர்கள் தொலைவில் இருந்து வர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவது இல்லை'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

    அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் விதுயுத் ஜம்வால் மாஸாக நடந்து வருகிறார். கேமராவை பார்த்து சுடுவதுப்போல் கை சைகை காட்டுகிறார். அவர் பின்னாடி வண்டிகள் எல்லாம் தீ பிடித்து எரிகிறது போல் காட்சி அமைக்கப்படுள்ளது. ஒரு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடித்துள்ளனர். இவர் நடந்து வரும் போது அனிருத்தின் பின்னணி இசை மிகவும் மாஸாக உள்ளது. தற்பொழுது இப்படத்திற்கு மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு பாலிவுட்டுக்கு செல்ல உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.
    • கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது அப்படத்தின் பெயர் 'ரயில்' என மாற்றப்பட்டுள்ளது

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ள இப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கிறது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
    • இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது.
    • சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக பதவியேற்கவுள்ளவருமான சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி வழங்கினர்.

    இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    • பேட்ட படத்தில் மீரா ரோலில் நடிகை மாளவிகா மோகனன் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
    • பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

    பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

    அந்த வகையில் தற்போது பேக்லஸ் ஆடையணிந்து ரசிகர்கள் மயங்கும் படியான போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பல டங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.
    • கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது.

    தற்போது சூப்பர் ஹிட் படங்கள் அனைத்தும் ரீலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆவலோடு ரசித்து கொண்டாடி வருகின்றனர். இப்படி ஏகப்பட்ட படங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.

    அந்த வகையில் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளாகும்.

    விஜய் நடிப்பில், இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்த்ராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் 'போக்கிரி' படத்தை தழுவி, வங்காள மொழியில் 2011ல் எடுக்கப்பட்ட 'மோனெர் ஜாலா' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
    • அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படைத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அதனை தொடர்ந்து உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் கீர்த்தி ஷெட்டி.

    அதன்பின் நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் 'தி வாரியர்' என்கிற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது லிங்குசாமி. இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் வெளியானது.

    இப்போது, வா வாத்தியாரே, லவ் டுடே புகழ் பிரதீப்புக்கு ஜோடியாக எல்.ஐ.சி மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெனி ஆகிய படங்களிலும் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

    இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படைத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அந்த புகைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி முத்துக்களால் ஆன உடையை அணிந்திருப்பார். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் லைக்குகளை பெற்றது. 

    • இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது.
    • விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை. இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது என்று கூறினார்.

    மேலும், மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில்,

    "நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது.
    • இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

    இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவத்தை பெற்ற நிலையில் படத்தின் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

    ஸ்டார் திரைப்படம் வெளியானதில் இருந்து மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றியைக் கண்டது. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து நடிகனாக வர வேண்டும் என ஆசை படும் கதாநாயகன், அவன் படும் கஷ்டம், காதல் , நட்பு , குடும்பம் என அனைத்தை பற்றியும் பேசக்கூடிய படமாக அமைந்துள்ளது.

     தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற 'ஒரு நாளில்' என்ற பாடல் மிகவும் ஹிட்டான பாடலாகும், இப்பாடலை நா. முத்துகுமார் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்த பாடல் ஸ்டார் திரைப்படத்தில் மீண்டும் இடம்பெற்றது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது.

    இந்த பாடலில் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார்.
    • படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.

    நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

    படத்தில் புஜ்ஜி என ஒரு அதிநவீன கார் இடம்பெற்றுள்ளது, இதற்காக மகேந்திர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு நிஜ காரை வடிவமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மகேந்தரா சிட்டியில் வைத்துள்ளனர். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் புஜ்ஜி& பைரவா என்ற அனிமேடட் சிரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×