SK 23 - சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் வித்யூத் ஜம்வால்

அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
SK 23 - சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் வித்யூத் ஜம்வால்
Published on

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் விதுயுத் ஜம்வால் மாஸாக நடந்து வருகிறார். கேமராவை பார்த்து சுடுவதுப்போல் கை சைகை காட்டுகிறார். அவர் பின்னாடி வண்டிகள் எல்லாம் தீ பிடித்து எரிகிறது போல் காட்சி அமைக்கப்படுள்ளது. ஒரு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடித்துள்ளனர். இவர் நடந்து வரும் போது அனிருத்தின் பின்னணி இசை மிகவும் மாஸாக உள்ளது. தற்பொழுது இப்படத்திற்கு மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு பாலிவுட்டுக்கு செல்ல உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com