என் மலர்
நீங்கள் தேடியது "Nitilan Sawaminathan"
- விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள அபர்னா மாலில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அதில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட் டியில், "மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை கற்று இருக் கிறேன். விமர்சனம், பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்த்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு துபாயில் புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்த போது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களில் சுற்றியது தான் நினைவுக்கு வந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை.
என்னை மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்து விட்டேன். பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வர வில்லை. காசோலை கூட பணம் இன்றி திரும்பி வந்து இருக் கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் டைரக்ட் செய்வேன்

ரசிகர்கள் தொலைவில் இருந்து வர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவது இல்லை'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உலக அளவில் ரீச் ஆனது.
- 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண கதையை நித்திலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியிருந்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உலக அளவில் ரீச் ஆனது.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா திரைப்படம், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு 100 வது நாள் வெற்றி விழாவில் மகாராஜா படக்குழு BMW காரை பரிசாக வழங்கியுள்ளது. காரின் சாவியை விஜய் சேதுபதி வழங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, படக்குழுவிக்கு நித்திலன் நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






