`புதுப்புது தயாரிப்பாளர்கள் வரவேண்டும்' - தனஞ்செயன்

இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்
`புதுப்புது தயாரிப்பாளர்கள் வரவேண்டும்' - தனஞ்செயன்
Published on

RINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அவ்விழாவில்

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...

பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும்.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது..

எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம்,

தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது...

இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.

படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் நாயகன் டிடக்டிவ் போல் எந்த குற்றத்திற்கு பின் உள்ள ரகசியங்களை தேடும் பணியில் உள்ளார். படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com