என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் எனது சமூக வலைத்தளங்களளில் எந்த பதிவையும் நீக்க போவது இல்லை. உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
- வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
- கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.
அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து
'உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்." என்று பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாக தகவல்.
- உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது.
கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கன்னடா திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டதை பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் கிரிஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.
மைசூருவில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகாசுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேருடன் நடிகர் தர்ஷனுக்கு பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரேனுகாசுவாமியின் சடலம் பெங்களூருவை அடுத்த காமாக்ஷிபாளையத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகியது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழுத்தமாக கூறி இருக்கும் படமாக அஞ்சாமை அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் பாடலான 'ஆரிராரோ' என்ற வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ராஹுல் நம்பியார் மற்றும் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது சமுக வலைத்தளங்களில் பகிரபட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தி நடிர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.
- சல்மான் கானின் ‘தபாங்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தி நடிர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். சோனாக்சி சின்ஹா 2010-ல் சல்மான் கானின் 'தபாங்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'ஜோக்கர், தபாங் 2, அகிரா, போர்ஸ் 2' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்துடன் 'லிங்கா' படத்தில் சோனாக்சி சின்ஹா நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் கடைசியாக நடித்த 'ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்' வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் கூடுதல் சுவாரசிய என்ன என்றால். இத்தொடரில் நடித்தவர்களுக்கு அடுத்தடுத்து கல்யாணம் நிச்சயம் நடந்துள்ளது. ரிச்சா சதாவிற்கு அந்த தொடரின் ஒரு பாடலுக்கு படப்பிடிப்பு நடத்தும் 10 நாள் முன் திருமணம் முடிந்தது. அதிதி ராவ் ஹைதரிக்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் சித்தார்த்துடன் நிச்சயம் முடிந்தது தற்பொழுது அடுத்ததாக நடித்த சோனாக்சி சின்ஹாவிற்க்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
சோனாக்சி சின்ஹாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. இவரும், இந்தி நடிகர் சாஹிர் இக்பாலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இருவரும் வருகிற 23-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் சோபோ ஹாட் ஸ்பாடில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் Xl என்ற திரைப்படத்தில் சோனாக்சி மற்றும் சாகிர் இக்பால் சேர்ந்து நடித்து இருந்தனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் சோனாக்சி சின்ஹாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- பிரியா அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
- மார்டர்ன் ட்ரெஸ்ஸில் படு ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனாரானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் முதல் படத்திலேயே தடம் பதித்தார் அட்லீ.
இதை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்களை வழங்கினார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் எண்டரி கொடுத்தார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.
இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் காதல் மனைவியான பிரியா தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இந்த நட்சத்திர ஜோடி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் பிரியா அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மார்டர்ன் ட்ரெஸ்ஸில் படு ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
- ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான குருமூர்த்தி என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
- இரண்டு ஆண்டுகளாக இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
மும்பையில் கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த நடிகை தான் பூனம் பஜ்வா, இவருக்கு வயது 39. தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார்.
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய பூனம் பாஜ்வா தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான "சேவல்" என்கின்ற படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை துவங்கினார். தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பை கொடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவில்லை. கவர்ச்சி நாயகியாகவே இவர் பல படங்களில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இறுதியாக கடந்த 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான "குருமூர்த்தி" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

அதனால் சமூக வலைதளங்களில் பிசியாக இருந்து வரும் பூனம் பஜ்வா அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் real Tesla girl, Original founder of Tesla, Tesla owner என வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.
ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது என்று அப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஃபகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார்.
- இப்படத்திற்கு பொகெயின்வில்லா என தலைப்பிடப்படுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகராக பேசப்பட்டது.
இந்நிலையில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார்.
அதற்கடுத்து இரண்டு வருடங்கள் கழித்து இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பொகெயின்வில்லா என தலைப்பிடப்படுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிகப்பு நிறத்தில் அமைந்து இருக்கும் இப்படத்தின் போஸ்டர் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை பிரபல நாவல் எழுத்தாளரான லஜோ ஜோஸ், அமல் நீரடுடன் இணைந்து எழுதியுள்ளனர். ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொல்ள, சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலகிருஷ்ணா தற்பொழுது அவரது 109 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் பால கிருஷ்ணாவை நேட்சுரல் பார்ன் ஸ்டார் என்ற பெயரை கொடுத்துள்ளனர். மிகப் பெரிய பில்டப் காட்சிகளுடன் பாலகிருஷ்ணாவின் அறிமுக காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபல இந்தி நடிகரான பாபி டியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.






