என் மலர்
சினிமா செய்திகள்
- இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம்.
- பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது,
இந்திய சினிமா இயக்குனர்களுள் மிக முக்கியமானவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம். 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,
'பிரபாஸ் மிகவும் சோம்பேறி, 'திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்'. என்று மிகவும் கிண்டலாக கூறினார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியதாவது, 'சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது. இந்த மூன்று பிரச்சினைகள் எனக்கு உள்ளன. நான் நிஜ வாழ்க்கையில்தான் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை'. என கூறினார்.
பிரபாஸ் தற்பொழுது கல்கி 2898 ஏடி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 அம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.
- இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்துள்ளது. கொலை, போலீஸ், கொலை செய்பவன் எல்லாம் கலந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது எம்மாதிரியான கதைக்களம் என போகப்போகத்தான் தெரியும். படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.
- தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார் அனிருத்.
தமிழ் திரையுலகில் இளம் மற்றும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடிப்பில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இத்திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார் அனிருத். இதுவரை கிட்டத்தட்ட 90 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்து இந்தி திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். ஷங்கர் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார், சமீபத்தில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக முறையில் சென்னையில் நடைப்பெற்றது.
வேட்டையன் , தேவரா, மேஜிக், விடா முயற்சி, எல்.ஐ.சி, இந்தியன் 3 என்ற அடுத்தடுத்த லைன் அப்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் அனிருத் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "சவுத் இந்தியாவ கலக்குற மாதிரி ஒரு கொலேப் லோடிங் -நாளைக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
யாருடன் இணைந்து இசையமைக்கபோகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஷ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடக்ககூடிய கதையாக அமைந்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.
- துலகர் சல்மான் நடித்து இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.
லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் நிறைவு செய்யப்பட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டதாக இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதேபோல தங்கலான் படத்தின் முதல் பாடலும் நிறைவு பெற்றதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் இரண்டு பாடல்களும் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துலகர் சல்மான் நடித்து இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கியவர் ஆவார்.
படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

மேலும் ரசிகர்கள் ஜிவி பிரகாஷிடம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தை பற்றியும் , தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் அப்டேட்டுகளை கேட்டனர். அதற்கு ஜிவி பிரகாஷ் அமரன் திரைப்பட பாடல்கள் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்தது, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்மதம் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன, அது எப்பொழுது வெளிவரும் என மிகவும் எக்சைட்டாக உள்ளேன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களாக அது அமையும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.
- ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது.
தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர்.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் துபாய் சென்றனர்.
புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்வின் ஏற்படும் திருப்பங்களே இப்படத்தின் கதை என இந்த ட்ரைலரை பார்த்தால் தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ரெஷ்மா நடித்து வருகிறார்.
- பாக்கியலட்சுமி, சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
சென்னை:
தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான பிரசாத் அவர்களின் மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் வெளியான "மசாலா படம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரேஷ்மா, அதற்கு முன்னதாகவே தெலுங்கு மொழியில் சில சீரியல்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் 'புஷ்பா' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சீரியல்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
சினிமா, சீரியல் என நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது.
- இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.
பாலிவுட் வெப் சீரியஸான மிர்சாபூர்' தொடரின் 3ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
- ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.
2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.
"ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்துள்ளது.
- இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.
இந்நிலையில், நேற்று, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனையடுத்து திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி.
- அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.
'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் . இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் 'நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி' எனக் கூறி வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இவர் இந்த பதிவின் மூலம் காதலை உறுதி படுத்தியுள்ளாரா, எனப்து புரியாத புதிராகவே உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.






