என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சசன்"

    • விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

    இந்நிலையில் விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    விஷ்ணு விஷால் அடுத்து இரண்டு வானம் மற்றும் ஆர்யன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் த்யாரிப்பில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் அடுத்து கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    • 'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி.
    • அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.

    'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.

    இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் . இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் 'நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி' எனக் கூறி வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இவர் இந்த பதிவின் மூலம் காதலை உறுதி படுத்தியுள்ளாரா, எனப்து புரியாத புதிராகவே உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    ×