'வாழ்வில் வந்ததற்கு நன்றி' - குக் வித் கோமாளி இயக்குனருடன் காதலா?

'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி.அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.
'வாழ்வில் வந்ததற்கு நன்றி' - குக் வித் கோமாளி இயக்குனருடன் காதலா?
Published on

'ராட்சசன்' படத்தில் தனது அசத்தலான நடிப்பினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்த அம்மு அபிராமி 'குக் வித் கோமாளி' சமையல் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் . இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் 'நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி' எனக் கூறி வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இவர் இந்த பதிவின் மூலம் காதலை உறுதி படுத்தியுள்ளாரா, எனப்து புரியாத புதிராகவே உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com