என் மலர்
சினிமா செய்திகள்
- சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பிரதீப் கே.விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் வசித்து வந்தார்.
நேற்று முதல் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்று போலீசாருடன் சென்று பிரதீப் கே.விஜயன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது குளியல் அறையில் தலைக்குப்புற கீழே விழுந்தபடி அவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது.
பிரதீப் கே.விஜயன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் கே.விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த பிரதீப் கே.விஜயனுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், தலை சுற்றல் ஏற்படும் என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புதுடெல்லி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப்படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பு தளங்களில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்தது.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் (செர்பியா) நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்டிச்சேரி படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகருக்கு ஆக்சிடண்ட் ஆகியது என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் சமயத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதனால் ஜோஜு ஜார்ஜ் ஓய்விற்காக கொச்சின் திரும்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
- புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
புஷ்பா-2 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் தயாராக உள்ள மற்ற சினிமா படங்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.
- டீசரில் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்திருந்தது
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. . படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. டீசரில் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார். படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி.
- பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி, ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருத்தணியில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு மத்தியில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனால் கங்கை அமரன் குடும்பத்துக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டது.
இந்நிலையில் பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரேம்ஜி தனது மனைவியுடன் இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுந்தர்.சி மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார்.
- மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்.
சுந்தர்.சி நடித்து இயக்கிய அரண்மனை 4 பேய் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்தது.
இதையடுத்து மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார். இதில் சுந்தர்.சி நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.
இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் சுந்தர்.சி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுந்தர்.சி. வடிவேலு கூட்டணியில் வந்த தலைநகரம், வின்னர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக இந்த படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது.
தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுந்தர்.சி ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டு பாகங்களை எடுத்துள்ளார். இந்த படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளார்.

கலகலப்பு 3 படத்தில் விமல், சிவா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டும், மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் சம்பந்தமாக எந்த அப்டேட்டுகளும் சமீப காலமாக வரவில்லை. இந்நிலையில் சீயான் விக்ரம் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வருகிறது. தலையில் முண்டாசுடன், மூக்குத்தி அணிந்தும் பார்க்கவே படும் பயங்கராமாக இருக்கிறார் விக்ரம். அப்புகைப்படத்திற்கு எக்ஸைட்டிங் டைம்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்கனர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
- சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
லாவா லாவா பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை.
- சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, வரும் ஜூன் 28ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின்போது, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா தரப்பில் கூறப்பட்டது.
- சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.
- ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.
சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா என்ற படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நிமிஷா சஜயன்.
தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . படத்தில் அவரது நடிப்பை லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒவ்வொரு விழாக்களிலும் பாராட்டினார்கள்.
அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பாராட்ட வைத்தது.
தொடர்ந்து ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் எந்த வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.
சினிமா மற்றும் வெப் தொடர்களில் பிசியாக நடித்து வரும் நிமிசா சஜயன் சமூக வலைத்தளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டு அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அருவி ஒன்றில் ஆனந்தமாக குளித்து மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிமிஷா சஜயன்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவர்ச்சியாகவும் நடிப்பதற்கு நிமிஷா ரெடி என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வேதிகா.
- 2013 ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
தமிழ் சினிமாவின் கதாநாயகிகளுள் ஒருவர் வேதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வேதிகா. மதராசி என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். ஆனால் 2013 ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தாண்டு தொடக்கத்தில் ரஸாகர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் பிரபுதேவாவுடன் பேட்ட ராப் படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து வேதிகா தற்பொழுது தெலுங்கு வெப் சீரிஸ் ஆன யக்ஷினி தொடரில் நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு என பல மொழியில் வெளியாகவுள்ளது. இது பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா.
- எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் பேட்ட ராப்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதியதிரைப்படம் தான் பேட்ட ராப்.படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் போஸ்டர்கள் மிகவும் கலர்ஃபுல்லாகவும், வைபாகவும் அமைந்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






