"லாவா லாவா.."- லாக்டவுன் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்கனர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
"லாவா லாவா.."- லாக்டவுன் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்
Published on

நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.

லாவா லாவா பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com