என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது.
    • விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."

    இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான `தீரா மழை' இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார்.
    • டந்த ஜனவரி மாதம் ’கட்சி சேர’ என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது.

    இளம் இசையமைப்பாளர் பட்டியலில் மிக முக்கியமானவராக திகழ்கிறார் சாய்  அபியங்கர், இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார். 21 வயது ஆகும் இவர் கடந்த ஜனவரி மாதம் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது. இன்ஸ்டாகிராம் மக்கள் ரீல்ஸ்-சை இப்பாடலுக்கு நடனம் ஆடி  பதிவு செய்த வண்ணம் கொண்டு இருந்தனர்.

    கட்சி சேர வீடியோ பாடலில் சாய் அபியங்கர் பாடுவது போல, இவர் கூட நடிகை சம்யுக்தா மேனன் நடனம் ஆடியிருப்பார். இப்பாடலில்  சம்யுக்தா ஆடும் ஒரு குறிப்பிட்ட ஸ்டெப் மிகப் பெரிய வைரல் எலெமண்ட் ஆனது. அதனை அனைவரும் ரீகிரியேட் செய்து போஸ்டுகளை பதிவிட்டனர். யூடியூபில் இப்பாடலை இதுவரை 12 கோடியே 90 லட்ச பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வைரல் பாடலை தொடர்ந்து தற்பொழுது சாய் அபியங்கர் அவரது அடுத்த பாடலான 'ஆச கூட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து , பாடியும் உள்ளார். இவருடன் அவரது தங்கையான சாய் ஸ்மிருத்தியும் இணைந்து பாடியுள்ளார்.

    இந்த பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பாடலில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்பாடலும் கூடிய விரைவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அப்யங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கும் தூரம் வெகு தூரமில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’.
    • இந்தியில் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. கொரோனா காலக்கட்டத்தினால் இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் போய்விட்டது. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் ஓடிடி தளத்தில் பார்த்து மக்கள் இப்படத்தை பெருமளவு வரவேற்பை கொடுத்தனர். சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.

    இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கையிலே ஆகாசம் பாடல் கொடுத்த உனர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. அது நமக்கு எப்பொழுது கேட்டாலும் ஒரு கூஸ்பம்ப்ஸ் பாடலாக இருக்கும்.

    தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு  தயாராகியுள்ளது.

    சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை படக்குழுவினர் போஸ்டர்  பதிவிட்டு அறிவித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 18 வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான `தீரா மழை' இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
    • இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார்.

    யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

     

    இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார். இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

     

    நாயகன் விதார்த் பேசுகையில், ''நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

    லாந்தர் திரைப்படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
    • 'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார்

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'ஆச்சார்யா' படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

    'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கின்றனர். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது.

    இப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் ஆனால் தற்பொழுது இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில்  உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
    • நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.

    இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து கூறி அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு- க்கும் இடையே இருக்கும் பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

    விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தவறு செய்தவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்.

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் கன்னட திரைத்துறையின் முக்கியமான, முன்னணி நடிகராக உள்ளார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு கன்னட திரைத்துறையில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக திரைப்பட வா்த்தக சபை தலைவர் என்.எம்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நடிகர் தர்ஷனுக்கு திரைத்துறையில் நடிக்க தடை விதிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு என்.எம்.சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைத்துறையில் தர்ஷன் மிகப்பெரிய நடிகர். இந்த கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதல் தெரிவிக்கிறோம். சினிமாவில் நடிக்க தர்ஷனுக்கு தற்போதைக்கு தடை விதிக்கவில்லை. அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால், அதன் பிறகு நாங்கள் மீண்டும் கூடி ஆலோசித்து தடை விதிப்பது குறித்து முடிவு எடுப்போம்.

    ரேணுகாசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாங்கள் இன்று சித்ரதுர்காவுக்கு செல்கிறோம். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய உள்ளோம். தவறு செய்தவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'பயமறியா பிரம்மை' திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
    • படத்தின் டிரைலரை நேற்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. . படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகியது.

    இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. டிரைலர் காட்சிகள் முழுக்கம் முழுக்க ஒரு மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு கைதி ஜெயிலில் அமர்ந்து அவன் இந்த நிலைக்கு வந்த காரணத்தை கூறுகிறான்.

    படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதம்.
    • இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

    அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.

    மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.

    ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ரசிகர் பதிவிட்டிருந்தார்.
    • அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது.

    கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

    தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அதுவும் போதிய வரவேற்ப்பு இல்லை.


    தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார்.

    ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு 'ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம். அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல் என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • ராஷி கன்னா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
    • இமைக்க நொடிகள், அடங்க மறு, அயோக்கிய, ஷைத்தான் க பச்சன் என தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    ராஷி கன்னா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். பின் கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. 

    2017 -ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கிய, ஷைத்தான் க பச்சன் என தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார்.


    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ராஷி கன்னா ஆக்டிவாக இருக்க கூடியவர். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


    அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். அதில், இந்த இடத்தில் என் பெயரை விட என் முகம் தான் அதிகம் தெரியும். "இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான முகம்" விருதை எனக்கு வழங்கியதற்கு நன்றி @sakalmedia. நன்றியுடன் என பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    ×