`நான் இந்த நிலைமைக்கு வர நான் மட்டும் காரணம் இல்ல' - பயமறியான் பிரம்மை டிரைலர்

'பயமறியா பிரம்மை' திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ராகுல் கபாலி இயக்கியுள்ளார். படத்தின் டிரைலரை நேற்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
`நான் இந்த நிலைமைக்கு வர நான் மட்டும் காரணம் இல்ல' - பயமறியான் பிரம்மை டிரைலர்
Published on

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. . படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகியது.

இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. டிரைலர் காட்சிகள் முழுக்கம் முழுக்க ஒரு மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு கைதி ஜெயிலில் அமர்ந்து அவன் இந்த நிலைக்கு வந்த காரணத்தை கூறுகிறான்.

படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com