என் மலர்
சினிமா செய்திகள்
- ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம்.
- திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் காதல் திருமணம் கடந்த 10-ந்தேதி சென்னையில் நடந்தது. தொடர்ந்து சாலிகிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் பேசியதாவது:-
நடிகராக பலமுறை இந்த மேடையில் ஏறிய நான் இன்று ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்த தந்தையாகவும் மாமனாராகவும் நிற்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை மேலே வந்து கீழே விழுந்து திரும்பவும் மேலே வந்து இப்போது சம நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.
தம்பி ராமையா உடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவரும் சம்பந்தி ஆவோம் என எங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. நல்ல பண்பாடு உள்ள குடும்பம் அவர் குடும்பம். வெளிநாட்டில் நான் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் உமாபதி ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போதே எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் விரைவில் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுப்பார். அதற்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. கூடிய விரைவில் அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
என் முதல் குழந்தையாக ஐஸ்வர்யா பிறந்தார். அவள் பிறந்ததில் இருந்து எனக்கு நேர் மறையான விஷயங்கள் பல நடந்தன.
ஒரு நாள் என் இளைய மகள் என்னிடம் வந்து அப்பா ஐசு உங்களிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என சொல்கிறார் என்று கூறினார்.
நான் என்ன விஷயம் என கேட்க எனக்கு தெரியாது உங்களிடம் தான் பேச வேண்டுமாம் என சொன்னார். கதை, திரைக்கதை எழுதி உள்ளதால் காதல் விஷயம் என யூகித்துக் கொண்டேன்.
ஆனால் மாப்பிள்ளை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார். மாப்பிள்ளை யார் என கேட்டேன் உமாபதி என்றாள்.
நான் ஷாக் ஆகி உமாபதியா எனக்கேட்டேன். என் மனைவி என்னிடம் நீங்கள் என்ன சொல்றீங்க என கேட்டார். அவரிடம் நான் என்ன சொல்வதற்கு. நல்ல வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். 16 வயது 14 வயது என்றால் நாம் யோசிக்கலாம்.
அவர்களது வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
நிறைய மிராக்கிள் நடந்துள்ளது என்றேன். ஐஸ்வர்யா இப்போதும் எனக்கு குழந்தையாக தான் தெரிகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் திருமணம் ஆனாலும் அவள் என்றும் குழந்தைதான். தொடர்ந்து தம்பி ராமையா குடும்பம் எங்கள் குடும்பம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம். திருமணம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவரின் முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை வேறு ஒருவர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை விரசமான வீடியோக்களில் இணைத்து இணையத்தில் சிலர் உலாவ விடுகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து டீப் பேக்கின் அபாயம் குறித்து தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் ஆலியா பட் அலங்காரம் செய்துகொள்வது போல் 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மையில் அவை டீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்டின் முகம் டீப் பேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி நடிகை கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரது டீப் பேக் வீடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.
- தற்போது படங்களில் கிளாமர் காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா, தமிழில் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக அறிமுகமானார். 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார். பட விழாவில் அவர் உடுத்திய ஊதா நிற கண்ணாடி இழையிலான சேலையும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுவரை படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த தான்யா ரவிச்சந்திரன், தற்போது படங்களில் 'கிளாமர்' காட்டவும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி தான்யா வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்களும் தான்யாவின் அழகை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்களாம்.
ரசிகர்களின் பேராதரவினால் தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடவும், படங்களிலும் கிளாமராக நடிக்கவும் தான்யா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான்யாவின் இன்னொரு முகத்தை விரைவில் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர்.
- நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்' செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அஜித்தின் 'குட் பேட் அக்லி' உள்பட பல படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

அதேபோல சீனியர் நடிகையான திரிஷா கமல்ஹாசனின் 'தக்லைப்', அஜித்தின் 'விடாமுயற்சி' படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.
இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாராவும், திரிஷாவும் படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.
ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறாராம். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா 'ஓவர் டேக்' செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிங்க்ஸ்டன் படம் ஜி.வி.பிரகாசின் 25-வது படம் ஆகும்.
- நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.
'வெயில்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், அடுத்தடுத்து தொட்ட படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து கவனம் ஈர்த்தார்.
'டார்லிங்' படம் மூலமாக கதாநாயகன் அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என 3 படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள 'கிங்க்ஸ்டன்' படம் அவரது நடிப்பில் வெளியாகும் 25-வது படம் ஆகும்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, "இந்த ஆண்டு எனக்கு ராசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. விரைவில் 'கிங்க்ஸ்டன்' படமும் வெளிவர இருக்கிறது. எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.
என் தேடல் அனைத்தும் இப்போது சினிமாவில் மட்டுமே. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்.
- சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்கி 2898 கி.பி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைரவா பாலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது.
- அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்.
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்தார்.
ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்திற்காக முதலீடாக ₹7 கோடி பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் ஷோபின் ஷாஹிர் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் ஷோபினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது.
- தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார்
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகாராஜா படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஜா பட இயக்குனர் சாமிநாதனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உன்னோட சேர்ந்து படம் பண்ணதில் எனக்கு பெரும் சந்தோஷம். படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே சொன்னேன் படம் வெளியானதும் இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுறோம் I Love You என்று இயக்குனருக்கு முத்தம் கொடுக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
'மகாராஜா' பட இயக்குனருக்கு முத்தம் கொடுத்து நன்றி சொன்ன VJS #maharajatrailer #maharajamovie #vijayseathupathi pic.twitter.com/a6FZGALPG1
— Thanthi TV (@ThanthiTV) June 15, 2024
- டீசர் நேற்று வெளியான நிலையில் அது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
- பயமறியா பிரம்மை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
புதுமுக நடிகர் ஜேடி, கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் அது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பயமறியா பிரம்மை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இயக்குநர் ராகுல் கபாலி கூறியதாவது:-
பயமறியா பிரம்மை என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும். இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை.
குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து, எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து, ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வு ரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள்.
இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம்.. எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்... ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கருடன் திரைப்படம் மே 31-ந் தேதி வெளியானது.
- இப்படம் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
2024 மே 31-ல் வெளியான கருடன் திரைப்படம் 10 நாளில் 50 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் 2024-ல் வெளியான லால் சலாம் பட மொத்த வசூலையும் இப்படம் முந்தி சாதனை படைத்திருக்கிறது.
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். விமர்சனம் ரீதியாக பிரபலமான இப்படம், அடுத்தடுத்த காட்சிகளில் பலரின் கவனத்தை பெற்று வசூல் ரீதியாக பிரபலமாகி வருகிறது. முதல் நாள் வசூலில் இருந்து மிக கணிசமான வசூலித்து வரும் கருடன் திரைப்படம், தற்போது 45 கோடிகளை கடந்து 50 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் உலகம் முழுவதும் 36 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. ரஜினி இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தோன்றி பின்னர், துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கருடன் திரைப்படம் வெளியான 10 தினங்களில் 45 - 50 கோடிகள் வசூல் செய்துள்ளது. இப்படம் 50 கோடிகள் வசூல் செய்து ரஜினியின் லால் சலாம் படத்தை பின்னுக்கு தள்ளி, வெற்றி படமாக அவதரித்துள்ளது.
- ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் நடிகை சாக்க்ஷி தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
- இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாக்ஷி அகர்வால். மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் முதலில் ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் துறையில் இருந்தார்.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய அளவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" மற்றும் ஆர்யாவின் "டெடி" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.

இறுதியாக தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் "பகீரா" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கருப்பு உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/






