search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டோ"

    • 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த். பின் பல முன்னணி படங்களில் நடித்து இருக்கிறார்.

    தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்பொழுது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரஷாந்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் குழு சார்பாக வாழ்த்தி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
    • சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.

    சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.

    ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.

    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

     

    இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.
    • சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் டோவினோ தாமஸ், கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.

    இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுனில்குமார் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சுனில்குமார், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

    இது தொடர்பாக திருச்சூர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    இதற்கு பதில் அளித்த சுனில்குமார், நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் என்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.

    • செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.
    • யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், சத்திய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரே போட்டோவை வைத்து போலி ஆவணங்கள் மூலம் 658 சிம் கார்டுகளை வாங்கி உள்ளார்.

    நவீன் ஒரே போட்டோ மூலம் 658 சிம் கார்டு வாங்கியது தொலை தொடர்பு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    இதுகுறித்து தொலை தொடர்பு துறை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது.

    இதேபோல் வேறு ஒரு வாலிபர் அஜித் சிங் நகர், விஷ்னா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் 150 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் அடையாளம் கண்டு சிம் கார்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் தற்போது எங்கே யாரிடம் உள்ளது.

    யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரே போட்டோ மூலம் வாலிபர் ஒருவர் 658 சிம் கார்டுகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ×