சஞ்சனாவின் ஹாட் வைரல் போட்டோஷுட்

ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.
சஞ்சனாவின் ஹாட் வைரல் போட்டோஷுட்
Published on

சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.

ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com