பிரபல நடிகர் சடலமாக மீட்பு

சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பிரதீப் கே.விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகர் சடலமாக மீட்பு
Published on

தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் வசித்து வந்தார்.

நேற்று முதல் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்று போலீசாருடன் சென்று பிரதீப் கே.விஜயன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது குளியல் அறையில் தலைக்குப்புற கீழே விழுந்தபடி அவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது.

பிரதீப் கே.விஜயன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் கே.விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த பிரதீப் கே.விஜயனுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், தலை சுற்றல் ஏற்படும் என கூறப்படுகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com