என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லாக்டவுன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
    X

    லாக்டவுன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

    • கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
    • லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஷ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடக்ககூடிய கதையாக அமைந்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×