சல்மான்கான் - ராஷ்மிகா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது

சல்மான்கான் - ராஷ்மிகா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் அறிவித்துள்ளார்.
Published on

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது என்று அப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com