என் மலர்
நீங்கள் தேடியது "Bobby Kolli"
- மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'வால்டர் வீரய்யா' படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக் கூட்டணி வசூல் சாதனை படைத்தது. இந்த புதிய திரைப்படத்தினை KVN Productions தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
மெகாஸ்டாரை ஒரு மாஸான கதாப்பாத்திரத்தில் காட்டும் திறன் கொண்ட இயக்குநரான பாபி, இந்த புதிய படத்துக்கு "The blade that set the bloody benchmark" என்ற டேக்லைன் உடன் ஒரு வலுவான கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஒரு சுவரை கோடாரி பிளக்கும் இந்த அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர் சிரஞ்சீவியை முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுமையான கதாப்பாத்திரத்தில் காட்டவுள்ளதாக இயக்குநர் பாபி உறுதியளித்துள்ளார். போஸ்டர் மற்றும் டேக்லைன் படி, இப்படம் தெலுங்கு சினிமாவிற்கே புதிய அளவுகோல் அமைக்கப் போகிறது என்ற எண்ணம் உருவாகிறது.
KVN Productions, நிறுவனம் தளபதி விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்', 'டாக்ஸிக்', 'பாலன்' என இந்தியாவே எதிர்பார்க்கும் பல பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்து வருகிறது. பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தந்து, இந்திய சினிமாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் பேசப்படும் தயாரிப்பு நிறுவனமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது KVN Productions. மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இந்த பிரம்மாண்ட படம் மூலம் KVN Productions நிறுவனம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்து உருவாக்கும் முதல் முயற்சியாக அமைந்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் துவங்கவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இப்படத்தின் மற்ற விபரங்களைத் தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலகிருஷ்ணா தற்பொழுது அவரது 109 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் பால கிருஷ்ணாவை நேட்சுரல் பார்ன் ஸ்டார் என்ற பெயரை கொடுத்துள்ளனர். மிகப் பெரிய பில்டப் காட்சிகளுடன் பாலகிருஷ்ணாவின் அறிமுக காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபல இந்தி நடிகரான பாபி டியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.






